பக்கம்:அருளாளர்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 * அருளாளர்கள்



எது தேவைப்படுகிறதோ அந்தந்த இடத்தில் அதை நிரப்பு வதற்காகப் பெரியவர்களை அனுப்பிவைப்பது இறைவ னுடைய திருவுள்ளமாகும். மிகப் பழைய காலத்தில் தோன்றிய இந்து சமயம் என்று சொல்லப்படுகின்ற சமயத் திலிருந்து மிக அண்மையில் தோன்றிய சமயங்கள் வரை எல்லாச் சமயங்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது இரண்டு பிரிவாக அவற்றைப் பிரிக்க முடியும்.

பழைய சமயத்தின் அடிப்படையை வைத்துக் கொண்டு காலதேச வர்த்தமானங்களுக்கேற்ப தேவையான மாறுதல்களைச் செய்வது ஒருவகை. மற்றொன்று, அந்த அடிப்படையை விட்டுவிட்டு முற்றிலும் புதியதாக ஒரு சமயத்தை உண்டாக்குவது. இந்த இரண்டு வகையிலும் சமயங்கள் வளர்ந்திருக்கின்றன. இந்தச் சமயம் போன்ற வற்றை யார் தோற்றுவித்தார்கள் என்கிற வினாவிற்கு விடை காண்பது இயலாத காரியம்; என்று தோன்றிற்று என்று சொல்லுவதும் இயலாத காரியம். இந்து சமயம் அப்படிப்பட்ட ஒரு சமயம். இனி ஏசுநாதர் அமைத்த சமயம், நபிகள் நாயகம் அமைத்த சமயம், புத்த பிரான் அமைத்த சமயம், ரிஷபதேவர் அமைத்த சமயங்களை எல்லாம் பார்ப்போமேயானால் அவரவர்கள் புதுவழி களைக் கண்டு புதுமுறையில் மக்களைச் செலுத்தி யிருக்கிறார்கள். ஆகவே அந்தச் சமயங்கள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இந்தச் சமயகர்த்தாக்கள் அனைவரும் மிகச் சிறந்த சீடர்களைப் பெற்றிருந்தார்கள். அவர்களுக்குத் தம் கருத்துக்களை உபதேசம் செய்தார்கள். நாளாவட்டத்தில் இந்த வாய்மொழி உபதேசம் நூல் வடிவங்களாயிற்று புத்தருடைய சீடராகிய ஆனந்தன் தொகுத்தவைதான் தம்மபதம் என்ற நூலாயிற்று. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/195&oldid=1285859" இலிருந்து மீள்விக்கப்பட்டது