பக்கம்:அருளாளர்கள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 * அருளாளர்கள்



துணைகொண்டு என்று சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆகவே இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பார்க்கும்போது முருகப் பெருமானுடைய வடிவழகிலே ஈடுபட்டு முதல் திருமுறை முழுவதும் சைவ சமயத்தில் ஊறிநின்றவராக அவர் பேசுகின்ற பேச்சுக்களை பல பாடல்களில் காண முடிகின்றது.

தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ (திருஅருட்பா-272)

வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ (திருஅருட்பா-275)

தணிகாசலம் போய்த்தழை யேனா சாமி திருத்தாள் விழையேனோ (திருஅருட்பா-280)

என்று சொல்லுவார். அதுமட்டுமல்ல. இறைவனே உன்னுடைய திருவடியை தரிசனம் பண்ண வேண்டு மென்று எத்தனை காலமாகத் துடித்துக் கொண்டிருக் கிறேன் என்பதை

பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்

பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்

கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்

காட்டென்றால் காட்டுகிலாய் (திருஅருட்பா-103)

என்று கூறுவர்.

இதனை எடுத்துக் கூறுவதற்கு காரணம் என்ன வென்றால் இத்தகைய பெரியவர்கள் புதிய வாழ்க்கை நெறியைப் படைக்க வருகின்றார்கள் என்பதற்கே ஆகும். அத்தனை பேர்களுக்கும் இது பொதுவாக இருப்பதைக் காண முடிகின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பொறுத்த மட்டில் இதனை நாம் அறிகின்றோம். அவர் ஒரு கதை சொல்கிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/199&oldid=1285861" இலிருந்து மீள்விக்கப்பட்டது