பக்கம்:அருளாளர்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 * அருளாளர்கள்



இங்கே மூன்று சொல்கிறார், பயிர்கள் தண்ணிர் இன்றி வாடிய நிலை. மக்கள் உணவின்றி வாடிய நிலை உணவு இருந்தும் பிணியால் வாடி வருந்துகின்றவர்கள் கண்டு இரங்கும் நிலை என்று, இந்த மூன்றும் கண்டு துடித்தேன் என்று சொல்வதை மனத்தில் வாங்கிக்கொள்ள வேண்டும். இங்கு கூறப்பட்ட மூன்று துயர நிலைகளையும் ஒன்றாகச் சேர்த்து,

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்

வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன் எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல்

வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்

- (திருஅருட்பா-3408) என்று பாடுகிறார். இப்பாடலில் வரந்தர வேண்டும் என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

உயிர்கள் வருந்துவது அவர்களது விதிவசத்தால் என்று பழங்காலமாக நாம் சொல்லிக்கொண்டு காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே அவரவர் வினை வழியே அவரவர் வருந்துகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கிறோம். அந்த நிலைபோக இப்போது வள்ளல் பெருமான் புதிய நெறியை வகுத்துக் காட்டுகிறார்.

பசியினால் வருந்தும் மக்களைக் கண்டு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கின்றார். நோயினால் வருந்தும் மக்களைக் கண்டு என்ன செய்ய வேண்டு மென்று நினைக்கின்றார். பயிர்கள் வாடினால் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/211&oldid=1285867" இலிருந்து மீள்விக்கப்பட்டது