பக்கம்:அருளாளர்கள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 217

பெளராணிகர்கள் கதை சொல்லப் போக அதையே உலகம் நம்புகின்ற அளவுக்கு கீழ்த்தரமாக வந்து விட்டது. இவற்றை எல்லாம் பார்த்ததினாலேதான்,

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக 

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
   (திருஅருட்பா-3768) என்கிறார். கலை உரைக்கின்ற கற்பனை எல்லாம் மெய் என்று நினைக்கின்ற சமுதாயத்தைப் பார்த்து அது ஒழிய வேண்டுமென்று பேசுகிறார். இத்தனை முடிவுகளையும் திருச்சிற்றம்பலத்தே எனக்கருளி இசைவித்தாய் என்பதாகக் கூறியவர். எல்லாச் சமயங்களும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வருகிறார். சமயமும், மதமும் கடந்ததோர் ஞானசபை என்று, சமயம், மதம் என்பவற்றையெல்லாம் கடந்து நிற்கின்ற நிலையை ஒருவாறு பெறுகிறார் பெருமான். 

இவ்வுலகில், எவ்வெவர்க்கும் அரும்பெரும் சோதியாய் நிற்பவனே இறைவன் என்பதை அறிந்தேன். அது போது மானது. அது தெரிந்துவிட்ட பின்னர் கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை. பிறசமயவாதிகள் எல்லாம் யானை கண்ட குருடர் போல ஒவ்வொரு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு இதுதான் தங்கள் சமயம் என்று பேசுகிறார்கள். அது தேவையில்லை என்று பேசுகின்றார்.

இதற்கடுத்தபடியாக முழுவதுமாக ஒரு புதிய வழியை வகுக்கின்றார். பல நேரங்களில்-இந்த சமயத்தை ஆராய் கின்றார். இஸ்லாமிய சமயம், கிறிஸ்துவ சமயம், சைவம், வைணவம், அத்வைதம் முதலானவற்றை எல்லாம்

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/228&oldid=1292382" இலிருந்து மீள்விக்கப்பட்டது