பக்கம்:அருளாளர்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 * அருளாளர்கள்

14


14 அருளாளர்கள்

திருமூலர் போன்ற நம் முன்னோர்கள் நம் நாட்டுக்குக் காட்டிய கருணையை அவரின் பின் வந்தவர்களாகிய நாம் கடைப்பிடிக்கிறோமா? திருமூலர் அளவிற்கு நாம் செல்லாவிடினும் இன்றைய சமுதாயத்திற்கு எது தேவை என்பதை அறிந்து அதையாவது பூர்த்தி செய்ய முயல்கிறோமா? எந்த அளவாவது நாம் நம் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்று நினைக்கிறோமா? சைவர்களாகிய நாம் இம்முறையில் சிந்திக்கத் தொடங்கினாலொழிய நம் சமயம், சமயம் நேரும்போது மெல்ல மறைதல் இயல்பு.

மனித வாழ்வு முழுவதையும் உற்று நோக்கினால் அதனை ‘அகவாழ்வு’, ‘புறவாழ்வு’ என்று இருவகையாகப் பிரிக்கலாம் என்பது விளங்கும். இங்கு யான் அகவாழ்வு, புறவாழ்வு என்று கூறுவது தமிழ் இலக்கியத்தில் கூறிய பிரிவை அன்று. மனிதன் தன் மனத்திலே ஒர் உலகை உண்டாக்கிக் கொண்டு வாழ்வதையே 'அகவாழ்வு’ என்று கூறுகிறேன். மனம், அதனோடு தொடர்புடைய உடல் என்ற இரண்டிற்கும் புறம்பாக உள்ள உலக வாழ்வையே 'புறவாழ்வு’ என்று குறிக்கிறேன். மேலை நாட்டாரைப் பொறுத்தமட்டில் புறவாழ்வில் இவ்வுலக வாழ்வில்) வெகுவாக முன்னேறிச் சென்றுள்ளனர். சந்திரனில் சென்று இறங்கும் அளவிற்கு முன்னேறிய அவர்கள் இப்பொழுது அந்த விஞ்ஞான முன்னேற்றத்தால் மட்டும் பயனில்லை என்பதையும் மனித மனம் எங்கு போனாலும் கூடவே வரும் என்பதையும் அம்மனம் வாழ்வு செம்மைப் பட்டாலொழிய மனிதவாழ்வு பூரணத்துவம்

அடைவதில்லை என்பதையும் கண்டு கொண்டனர். இன்று அவர்கள் அனுபவமூலம் கண்டுகொண்ட இந்த உண்மையை அவர்கள் சமயத்தை நிறுவிய இயேசு பெருமான் இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னரே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/23&oldid=1291484" இலிருந்து மீள்விக்கப்பட்டது