பக்கம்:அருளாளர்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 * அருளாளர்கள்


     உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு

என்று நக்கீரர் தொடங்கினார். ஒளிவடிவாக ஆண்டவணை,

     சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே

என்று மாணிக்கவாசர் பேசினார்.

     ஒளிவளர் விளக்கே உலப்பிலா, ஒன்றே

என்று திருவிசைப்பா ஆசிரியர் பேசுவார். ஒளி என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்டதுதான். அதைப் பொதுத் தன்மையுடையதாக இங்கே வெளியே எடுத்து “சோதி” என்று சொன்னார். ஒளிக்கு இலக்கணம் வகுக்கின்ற முறையில் ஏதாவது குறிப்பிட்டார்களா என்றால் முன்னர் கூறிய கருத்தை தாயுமானவர் ஒளி என்பதனோடு அதில் கருணையையும் சேர்க்கின்றார்.

   எங்கும் பிரகாசமாய் . . . அருளொடு நிறைந்தது

என்று சொல்லும்பொழுது, அந்த ஒளி அருளொடு நிறைந்தது என்ற கருத்தை விரிவாக கூறுகின்றார். அதில் ஈடுபட்டவராகிய வள்ளற்பெருமான் சோதி என்று சொல்லும் பொழுது அந்தச் சோதிக்கு கருணை என்ற குணத்தை ஏற்றி அருட்பெருஞ்சோதி என்று கூறுகிறார். ஆகவே எல்லாச் சமயத்தார்களும் தாங்கள் கருதும், இறைப் பொருளை சோதி வடிவானது என்று சொல்லுகிறார்கள், கருணை வடிவானது என்றும் சொல்லுகிறார்கள். ஆகவே அந்தத் தாரக மந்திரத்தை இவர் ஆக்கித் தரும்போது கடவுள் என்ற தனிப்பட்ட பெயரைச் சொல்லாமல்,

   அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை

என்று சொல்லிவிட்டால் அது எல்லாச் சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக அமையும் என்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/231&oldid=1292388" இலிருந்து மீள்விக்கப்பட்டது