பக்கம்:அருளாளர்கள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 221


மாபெரும் முடிவுக்கு வந்து, அவருடைய வாழ்க்கை நெறியில் இந்தத் தாரக மந்திரத்தைத் தந்தார். அப்படியானால் சிவபெருமானையும், முருகனையும் வழிபட்ட பெருமான், விபூதி இடாதவர்களைக் கனவிலும் கூடக் காணக்கூடாது என்று தொடங்கிய பெருமான் வளர்ச்சியடைந்து அருட்பெருஞ்சோதியில் முடிகின்றார். அவருடைய வாழ்வில் ஏற்பட்ட இந்தப் புதிய திருப்பத்தை அன்றையச் சமுதாயம் ஏற்றுக் கொண்டதா என்பது சிந்தனைக்குரியது. -

ஆறாம் திருமுறையில் அகத்துறையில் அமைந்த பாடல் ஒன்றில் பின்வருமாறு கூறுகின்றார். ஒரு பாதி தோழியும்-ஒரு பாதி தலைவியும் சொல்வதாக அமைந்து உள்ளது அப்பாடல். முதல் பாதியில் தோழி ‘உன்னுடைய தலைவன் பெயர் என்ன?’ என்று கேட்கிறாள் அதற்கு அற்புதமாக தலைவி விடை கூறுகிறாள்.

பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன்என்பேன்
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம்என்பேண் பிரமம்என்பேன் பரப்பிரமம்என்பேன்
துருவுசுத்தப் பிரமம் என்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவம் என்பன் இவை சித்துவிளை யாட்டே,

                                                     (திருஅருட்பா-5801)

இது என்ன வேடிக்கை? இவை எல்லாம் புறச் சமயத்தார்களுடைய பெயர்கள் அல்லவோ? என்று தோழி கேட்கிறாள். இல்லை. பிற சமயம் என்று இஸ்லாம்கிறிஸ்துவத்தைக் கூட ஒன்றாக்கிக் கொண்டு எந்தப் பெயரைச் சொன்னாலும் அது என்னுடைய தலைவனுடைய பெயர் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/232&oldid=1292389" இலிருந்து மீள்விக்கப்பட்டது