பக்கம்:அருளாளர்கள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 223

என்று சொல்லுவார்.

    அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்

என்று திருமூலர் தொடங்கி வைத்தார். அவரை அடியொற்றி வந்த தாயுமானவப் பெருந்தகை, அவரை அடியொற்றி வந்த வள்ளற்பெருமான் 'அருட்பெருஞ் சோதி' என்ற தனிப்பட்ட ஒரு தாரக மந்திரத்தைத் தரும் போது, அதற்குரிய தொடர்பை நமக்குக் காட்டுகின்ற முறையில் அன்பு ஒன்றுதான் அந்தப் பொருளுக்கும் நமக்குமுள்ள தொடர்பு. அன்பு ஒன்றினால் அந்தப் பொருளை நம் கைக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்ற மாபெரும் கருத்தை அற்புதமாகப் பேசுகிறார். இதற்குமேல் இவை இரண்டும் ஆன்மிக அடிப்படையில் அமைந்ததாயிற்றே - சமுதாயத்தைப் பொறுத்த மட்டில் என்ன நினைத்தார் மறத்துவிட்டாரா? என்றால் இல்லை. மனிதனை அல்லாமல் இயங்கி இயல் உயிர்களாக உள்ள விலங்குகட்கு கூட தனி இலக்கணமாக அமைவது அன்பு ஒன்றுதான். அந்த அன்பே இறையின் இலக்கணம் என்ற முடிவுக்கு வந்த வள்ளலார் மனித சமுதாயத்தை எவ்வாறு மறக்க முடியும்? ஆக மனித சமுதாயத்திற்கு மட்டும் அல்லாமல் உயிர் வர்க்கம் அனைத்திற்கும் அன்பு செய்வதே இறைவனை அடையும் வழி என்ற முடிவுக்கு வந்து அதை விரிவாக இங்கே பேசுகின்றார்.

     அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
         ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் 
     எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
         எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
     செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
         திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/234&oldid=1292392" இலிருந்து மீள்விக்கப்பட்டது