பக்கம்:அருளாளர்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருமந்திரம்-பொருள்நிலை 15

கண்டு மனிதன் ரொட்டித் துண்டால் மட்டும் வாழ்வதில்லை என்று கூறிப் போனார். மனிதனுடைய அகவாழ்வு (மனவாழ்வு செம்மைப் படாத பொழுது புறவாழ்வு (உலகவாழ்வு எத்துணைச் சிறப்புடன் பொலிந் தாலும் பயனில்லை. இதனை நன்கு மனத்துட் கொண்டு இந்நாட்டில் வாழ்ந்த பேரருளாளர்கள் நமக்கு வழி காட்டிப் போயினர்.

தம் ஆன்மாவை முன்னேற்றவேண்டிய தேவை இல்லாத இப்பெருமக்கள் இவ்வுலகிடை வந்து பிறந்து நம்முடன் பழகி நம்முடைய நன்மைக்காகவே சில,பலவற்றைக் கூறிப் போயினர். அவர்கள் தம் நிலையில் இருந்து நம்மாட்டுக் கொண்ட கருணையால் கீழிறங்கி வருகிறார்கள் என்பதை அறிந்ததால்தான் அவர்கள் வருகையை அவதாரம் (கீழிறங்கி வருதல்) என்றும் குறிக்கிறோம். முழுமுதற் பொருளாகிய இறைவன் மட்டும் செளலப்பியம்’ (வழிவந்த தன்மை) உடையவனல்லன். அவனருள் பெற்ற பெரியோர்களும் இந்த வழிவந்த தன்மையை நிரம்பப் பெற்றவர்கள்.

சீவன் முத்தராகிய திருஞானசம்பந்தர் போன்ற பெரியோர்கள் திருவீழிமிழலை போன்ற பகுதிகளிற் பஞ்சம் வந்தபொழுது அவன் மடம் வைத்து அனைவருக்கும் சோறு சமைத்துப் போட்டு அவர்கள் பசிப் பிணியைப் போக்கினர் என்று வரலாறு பேசுகிறது. ஆண்டவனிடம் பக்தி கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிவுறுத்திய அவர்கள் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழ’வும் வழி கூறினர். இதனால் அப்பெரியார்கட்குப் பொதுமக்கள் தொடர்பு நிரம்ப இருந்தமையை அறிகிறோம். அவர்கள் பேசிய சமயமும் கடவுள் நம்பிக்கையும், மக்கள் அனைவரையும் இறைவனாகவே காணுகின்ற நிலையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/24&oldid=1291513" இலிருந்து மீள்விக்கப்பட்டது