பக்கம்:அருளாளர்கள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 * அருளாளர்கள்



ஏற்றுக்கொண்டு மாலை கொழும்பு போவதற்குத் தயாராக காரில் ஏறி அமர்ந்தேன். கண்ணிர் மாலை மாலையாக வந்தது. காரணம் என் பிழைப்பே வாயின் மூலம்தான் நடைபெற்றது. கல்லூரிப் பேராசிரியர், தொடர்ந்து சொற்பொழிவு செய்பவர் என்ற இரண்டும் போய் விட்டனவே. என்னுடைய பெரிய குடும்பம் என்னாவது என்ற கவலை மனம் முழுவதையும் சூழ்ந்து கொண்டது. இந்த நிலையில் காரை ஆயத்தப்படுத்த சாவியைச் செருகிய நிலையில் அந்த மருத்துவ நிபுணர் வெளியே வந்து காரின் கதவைப் பிடித்துக் கொண்டு, “அ. ச. ஐயா! யோகருடைய சீடர்தானே தாங்கள். அவரைப் போய்ப் பாருங்களேன்’ என்றார். அந்த விநாடிவரை சுவாமிகளின் நினைவே என்மனத்தில் தோன்றவில்லை. அவர் கூறிய வுடன் சுவாமிகளிடம் செல்லப்புறப்பட்டேன். அக்காலத் தில் பகலில் யாரும் சுவாமிகளிடம் செல்வதில்லை. அவருடைய தியானம் முதலியவற்றிற்கு இடையூறாக யாரும் போவதில்லை. மாலை ஆறுமணிக்கு மேற்தான். செல்வார்கள். அனைவருக்கும் தெரிந்த இந்தச் செய்தி எனக்கும் தெரிந்திருந்தது. எனவே, ஒரு விநாடி சிந்தித்து உடனடியாக சுவாமிகளிடம் போவதே சரி என்ற முடிவிற்கு வந்தேன். நேரே வண்டியை ஒட்டிச் சென்று ஆசிரமத்தின் பக்கத்தில் நிறுத்திவிட்டு எதிரே உள்ள கேணியில் கைகால்களைச் சுத்தம் செய்து மகானின் குடிலுக்குள் நுழைந்தேன். அடக்கமுடியாத அழுகையும், கண்ணீரும் என்னை ஆட்கொண்டிருந்தன. விழுந்து வணங்கிய நான் எழுந்திருக்க விரும்பவில்லை. ஓரிரு நிமிடங்கள் கழித்து, “ஏண்டா பொடியா. அந்த மருத்துவர் என்ன முருகன் என்ற நினைப்பா? எதற்காக அவரிடம் போனாய்?’ என்று திட்டியதோடல்லாமல் என்னுடைய அறியாமை பற்றியும் வெகுவாக ஏசினார்கள், கடைசியில் “பொடியா இங்கே உட்கார்’ என்று நான் வழக்கமாக அமரும் இடத்தைக் காட்டினார்கள். அப்பொழுது இருந்த மனநிலையில் சுவாமிகள் பேசியது எதுவும் என் மனத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/251&oldid=1292662" இலிருந்து மீள்விக்கப்பட்டது