பக்கம்:அருளாளர்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

திருமந்திரம்-பொருள்நிலை * 13


திருமந்திரம்-பொருள்நிலை 19


செல்கிறது பழைய புறநானூறு, ஆனால் அதே செல்வம் தகுதி இல்லாதவன் மாட்டுச் சிக்கிக் கொண்டால் அவனையும் கெடுத்துத் தானும் கெடுகிறதன்றோ? அதேபோல உடம்பெடுத்ததன் பயன் பிறர் பொருட்டுப் பயன்படுதற்காக ஆனால் அப்பயன் விளையாதபொழுது அந்த உடம்பு பாரமாகி விடுகிறது. உடம்பை வளர்ப்பது எப்போது? திடம்பட மெய்ஞ்ஞானம். சேரும் வழிக்கு உடம்பு உதவியாக இருக்கும்பொழுது.

மைந்தன் நல்லனவற்றைச் செய்யும்பொழுது அவனைப் போற்றும் அதே தந்தை அவன் தவறு செய்தபொழுது இடித்துரைத்தல் போல உடம்பை ஒரு முறை போற்றியும் மற்றொரு முறை தூற்றியும் பாடுகின்றார் பெரியார். உடம்பை வைத்துக் கொண்டு பயன்படுத்தும் வழிபற்றிப் பலர் கொண்டுள்ள தவறான கருத்தையும் சாடுகின்றார். ஒரு சிலர் ஆசனம் இட்டுப் பிராணயாமம் செய்து விடுவதால் பெரும் பயனை அடைந்து விடலாம் என்று நினைப்பதை எள்ளி நகையாடுமுகமாக ஒரு கருங்கல் எண்ணாயிரம் ஆண்டு நீருள் கிடப்பினும் ஒரு சொட்டு நீரையும் உறிஞ்சாதது போல இத்தகைய சித்திகளால் எவ்விதப் பயனுமில்லை என்கிறார். மெய்யுணர்வு வாய்க்கப் பெறாமல் பொறி புலன்களை அடக்கிப் பழகுவதால் எப்பயனும் விளையாது என்ற பேருண்மையைக் கூறுகிறார். இதே கருத்தை வள்ளுவப் பெருந்தகையும்,

‘ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லாத வர்க்கு’ (குறள்-354) என்று கூறுகிறார்.

விஞ்ஞானத்தின் துணைகொண்டு புற உலகில் முன்னேறியுள்ள மேலைநாட்டார் இன்று தம் அனுபவ மூலம் கண்டுள்ள புதுமை இதுவாகும். எத்துணை வசதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/28&oldid=1291367" இலிருந்து மீள்விக்கப்பட்டது