பக்கம்:அருளாளர்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 * அருளாளர்கள்

22


22 அருளாளர்கள்


உண்மைகளையும் அவ்வகமுகமான நோக்கம் கண்டு வெளியிடுகிறது. மனிதப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆன்மிக முன்னேற்றத்துக்கு அடிகோலுவதும், பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு அறிய முற்படுவதும் அகமுக நோக்கமேயாகும். எந்த வழியிற் சென்றாலும் இறுதியில் அடையும் பயன் ஒன்றேயாகும். வழிகள்தாம் பல வகையே தவிர முடிவு ஒன்றுதான்.

அகமுகநோக்கம் ஒன்றையே துணையாகக் கொண்டு திருமூலர் எத்தனை எத்தனையோ உலகங்களைப் பற்றிக் கூறிக்கொண்டு செல்கிறார். அவையெல்லாம் நம்மைப் பொறுத்தவரை ஊமையன் கண்ட கனவாகவே உள்ளன. அவர் கூறுகின்ற சக்கரங்கள் என்ன என்பதை இன்று பலர் அறிய முடியுமா? ஒரு பொருளை ஆராய்ந்து அதன் இயல்புகளை அறிவது வேறு; அதனை அனுபவிப்பது என்பது வேறு. சர்க்கரை என்ற பொருளைச் சுவைத்து அனுபவிப்பது ஒன்று; அதே சர்க்கரையைச் சோதனைக் குழாயிலிட்டு அதன் இயல்பு என்ன என்று ஆராய்வது வேறு. திருமூலரைப் பொறுத்த மட்டில் பொருளை ஆராயவும் செய்கிறார், அனுபவிக்கவும் செய்கிறார்.

பக்தி மார்க்கத்தில் சென்ற அடியார்கள் இறை வனைப் பற்றி அறிவின் துணைகொண்டு ஆராயாமல் அன்பின் துணைகொண்டு பக்தி செய்தனர். பின்னர்த் தோன்றிய மெய்கண்டார் போன்ற பெரியோர்கள் அறிவின் துணைகொண்டு இறைவனின் இயல்பையும், உலகின் இயல்பையும் ஆராய முற்பட்டனர். ‘ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா, சுடர்விட்டு நின்றுளன் எங்கள் சோதியான்’ என்று எந்தப் பரம்பொருளை அறிவின் துணைகொண்டு அதிகம் ஆராய வேண்டா என்று ஞானசம்பந்தர் கூறினாரோ அதே பொருளைப்பற்றி மெய்கண்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/31&oldid=1291442" இலிருந்து மீள்விக்கப்பட்டது