பக்கம்:அருளாளர்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

திருமந்திரம்-பொருள்நிலை * 13


திருமந்திரம்-பொருள்நிலை 29

இரண்டறக் கலந்து அவர்கள் இரத்த ஓட்டத்தோடு கலந்திருந்த சமயம் இன்று வெறும் வெளிப்பூச்சாய் ஆரவாரமுடைய சடங்குகளாய் நின்றுவிட்டமையின் உண்மைச் சமயத்தைப் பற்றிக் கவலைப்படுவார் யாரும் இல்லாமற் போய் விட்டனர்.

‘அப்பாலும் அடி சார்ந்தார்’ அனைவரையும் உளப்படுத்திக் கொண்டு அகில உலகத்திலும் உள்ளார் அனைவருக்கும் பொதுவாக இருந்த சமயம் இன்று இருக்கும் நிலை யாது? 'இன்று சைவ சாப்பாடு’ என்று கூறுகின்ற முறையில் சாப்பாட்டுச் சைவமாகி நிற்கும் அவல நிலை ஏன்?

இறைவனுக்குச் செய்யும் தொண்டைவிட உயிர் கட்குச் செய்யும் தொண்டே சிறந்தது என்றும், அதில் தான் இறைவனும் மகிழ்கிறான் என்றும் கூறிய சைவ சமயம் உண்மையிலேயே உலகச் சமயங்களுள் மிக உயர்ந்தது என்பதில் ஐயமில்லை. இதனை உலகம் முழுவதற்கும் எடுத்துக்கூறிச் 'சேர வாரும் செகத்தீரே’ என்று அழைக்க வேண்டியவர்கள் தமிழர்களாகிய நாம்.

இத்தகைய சமயத்தையும் அதன் உண்மையான தத்துவத்தையும் உள்ளவாறு எடுத்துக் கூற முற்பட்டால் ஓயாத அல்லலிற் சிக்கித் தவிக்கும் இன்றைய உலகம் உடனே செவி சாய்க்கும். மனிதன் சந்திரமண்டலத்துக்குப் போனாலும் அவனுடைய மனம் அவன் கூடத்தான் போகிறது. 'மனம் அடங்கக் கற்காவிட்டால் எந்த மண்டலத்திற்குச் சென்றாலும் அமைதி கிட்டாது'. எனவே மனிதன் பெறவேண்டிய அந்த ஒப்பற்ற அமைதியை உள்ளவாறு எடுத்துக் கூறும்'திருமந்திரம்’ போன்ற நூல்களை நம்முடைய பூசைப் பெட்டியை விட்டு வெளிக் கொணர்ந்து காலத்திற்கேற்பப் பரப்புவோமானால் நாமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/38&oldid=1291379" இலிருந்து மீள்விக்கப்பட்டது