பக்கம்:அருளாளர்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் . 59

என்று கூறிவிட்டமையின் கருத்தால் கண்டமை பெறப்பட்டு விட்டது. இனி அடுத்து யானும் என்பதில் உள்ள இழிவு சிறப்பும்மை காணப்பட்ட பொருளின் இறப்ப உயர்ந்த நிலையையும் கண்டவருடைய இறப்ப இழிந்த நிலையையும் விளக்கி நிற்கக் காண்கிறோம்.

இதே கருத்தைத்தான் நம்மாழ்வாரும், “கார்முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் காண்டேனே’

(நாலா 2280)

என்றும்,

‘...... எல்லாப் பொருட்கும் அருவாகிய ஆதியைத் தேவர்கட்கு

                      எல்லாம் 

கருவாகிய கண்ணனைக் கண்டு

                 கொண்டேனே’
                  (நாலா:2280)

என்றும் பாடுகிறார். இறைவனுடைய வண்ணத்தை முதலிற் கூறுவது அறியத்தக்கதாகும். சாதாரண மக்கட் காட்சிக்கும், கடவுட் காட்சிக்கும் உள்ள வேறுபாட்டை அறிவுறுத்துகின்றது இந்த அடி.மக்கட் காட்சியில் முதலில் தோன்றுவது வடிவமேயாகும். இன்னும் அருகில் செல்லும்பொழுதுதான் வண்ணம் அல்லது நிறம் தெரியும். அதையும் அடுத்து, நெருங்கிச் செல்கையில்தான் உருவம் தெரியும். ஆனால் இறைவனைக் காணும் காட்சியில் முதலில் தெரிவது வண்ணம் அல்லது நிறமேயாகும். இதை மனத்துட் கொண்டுதான் ஆழ்வார், 'கார்முகில் போல் வண்ணன் . . கண்டேனே’ என்று பாடுகிறார். மணிவாசகப் பெருமானும் இத்தகைய காட்சியைக் கூறுமிடத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/68&oldid=1291479" இலிருந்து மீள்விக்கப்பட்டது