பக்கம்:அருவிகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றால அருவி 99 என்பது பெயர். புலிகள் வந்து நீரருந்தும் காரணம் பற்றி இதற்குப் புலியருவி என்றும் பெயர் வழங்கு கிறது. சாரற் காலத்தில் வட அருவியில், மக்கள் தொகை நிறைந்திருக்கும் காரணத்தால் பலர் இம் புலி அருவியில் நீராட வருவர். இவ்வருவி தரையில் ஆறாகப் பாயும்போது அழகனாறு' எனப் பெயர் பெறுகின்றது. சில யான 6 புலியருவியில் மக்கள் நீராடுவதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள ஐயனார் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அக்கோவி லைச் சுற்றியுள்ள இடம் கற்கள் பரப்பப்பட்டுச் செம்மை மேடையாகச் செய்யப்பட்டுள்ளது. அருவி நீர் இரண்டாகப் பிரிந்து கோவிலையும் மேடையையும் சுற்றிச் செல்கின்றது. இரு பிரிவுகளிலும் கால்வாய் களின் போக்கில் படிகள் கட்டப்பட்டு நீராட ஏற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வசதிகளைச் செய்த, பெருமகனார், கலைத்தந்தையார்' எனக் கற்றாராற் போற்றப் பெறுபவரும், தமிழ் வளர்ப்பதையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளவரும், மதுரை மீனாட்சி பஞ்சு ஆலை உரிமையாளருமாகிய கருமுத்து - தியாகராசச் செட்டியாராவர். சாரற்காலம் 6 . மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பெரிய வெளி யாகிய ஆரியன்காவுக் கணவாய் அண்மையில் இருப்ப தால், அக்கணவாய்க்கு மேற்குப் பக்கம் எழுகின்ற தென் மேற்குப் பருவக் காற்றும் மழையும் அக்கண வாய் வழியே வீசிக் கிழக்குப் பக்கத்தில் இருக்கின்ற குற்றாலத்தில் இளங்காற்றாகவும் சிறு மழையாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/103&oldid=1693063" இலிருந்து மீள்விக்கப்பட்டது