பக்கம்:அருவிகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றால அருவி 101 தொடர்ந்து சில நாட்கள் உலாவலையும் நீராடுதலையும் அவர்கள் உடல்நலம் பெற்றுத் மேற்கொள்ளின், திகழ்வார்கள் என்பது உறுதி. அறிஞர் பாராட்டு ஏறத்தாழ நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிழக்கு இந்தியக் கம்பெனியார் நியமித்த மருத்துவக் குழு குற்றால அருவியைப் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளது; "அருவிக்குள் நுழைந்ததும் முதன் முதல் ஒருவித நடுக்கம் உண்டாகின்றது. பின்பு இன்னதென்று விளக்கமுடியாத ஒருவித இன்பம் தோன்றுகிறது. அருவியின் விரைவு உடம்பில் தாக்குவதால் குருதியோட்டம் விரைவுப்படுகிறது; அதனால் உடம்பு முழுவதும் உணர்ச்சி பெறுகிறது; சோம்பலைக் கெடுத்து உள்ளக் களிப்பை மிகுவிக் கின்றது; பசியை உண்டாக்கிச் செரிமானத்தைச் சீர் செய்து பலவித நன்மைகளை உண்டாக்குகின்றது. நாங்கள் அறிந்தவரையில் வேறு எவ்வித நீராடலும் இத்துணைப் பயன்களையும் ஒருங் கே பயப்பதில்லை. மருத்துவ நலன் மிக்குள்ள இவ்வருவி நீரும், மனத்தை இன்புறுத்தும் தட்பவெட்ப நிலையும் சேர்ந்து இங்கு வருவார்க்குப் புத்துயிர் வழங்கு கின்றன." திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை வரைந்து, தமிழ் மொழியின் பழமையையும் பெருமை யையும் உலகறியச் செய்த பிஷப் கால்டுவெல் என்ற பேரறிஞர், "உலகத்திலேயே மிகச் சிறந்த நன்னீர்க் கட்டம் குற்றாலத்தில் அமைந்திருக்கிறது. அருவி நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/105&oldid=1693065" இலிருந்து மீள்விக்கப்பட்டது