பக்கம்:அருவிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 ஊரின் அமைப்பு பாட 2. குற்றாலப் பதி அருவியைச் சார்ந்த மலையடிவாரப் பகுதியில் டல்பெற்ற திருக் குற்றாலநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. அதற்கு எதிர்ப்புறத்தில் தென்காசி யிலிருந்து வரும் சாலை அமைந்திருக்கிறது. அச்சாலை யில் சில கடைகள் அமைந்துள்ளன. கோவிலி லிருந்து ஐந்தருவிக்குச் செல்லும் நீண்டபாதை அழ காகத் தோற்றமளிக்கிறது. அப்பாதையின் தொடக் கத்தில் இருபக்கங்களிலும் சிறந்த வளமனைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு அப்பால் சில தெருக்கள் அமைந்துள்ளன. அன்றாடம் அருவியில் நீராட வரும் மக்களுக்குத் தேவையான பொருள்களை விற்கவும், உண்டிச்சாலைகளை வைத்து நடத்தவும் அங்குக் குடியேறிய மக்கள் வாழ்கின்ற தெருக்கள் சிலவாகும். மலைமீதுள்ள காடுகளைப் பாதுகாக்கும் அரசாங்க அலுவலர் குடியிருப்புக்கள் சில; கோவிற் பணியாளர் வாழ்கின்ற இல்லங்கள் சில. முப்பது ஆண்டுகளுக்குப் பின்பே இவ்வூர் இத்துணைத் தெருக் களையும் வீடுகளையும் பெற்றுள்ளது. தங்குதற்குரிய வசதிகள் அருவியில் நீராடும் பொருட்டு வருகின்ற மக்கள் தங்குவதற்குப் பல இடங்கள் இருக்கின்றன. கோவி லார் பல கட்டடங்களைக் கட்டி வாடகைக்கு விடுகின் றனர். திருவாவடுதுறை ஆதீனம், செங்கோல்மடம் இவற்றுக்குரிய மடங்கள் நீண்டகாலமாக இங்கு இருந்துவருகின்றன. புதிதாகக் கட்டப்பட்டுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/108&oldid=1693068" இலிருந்து மீள்விக்கப்பட்டது