பக்கம்:அருவிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றால அருவி 107 றும் பெயர் பெற்றவர். இறைவியின் பெயர் குழல் வாய் மொழியம்மை. குழலின் ஒலிபோன்று இனிமை பொருந்திய சொல்லையுடைய அம்மை என்பது இப் பெயரின் பொருளாகும். கோவில் அமைப்பு குற்றாலநாதர் கோவில் சங்க வடிவமாக அமைந் துள்ளது. இக்கோவில் கிழக்கு மேற்காக முந்நூற்று எழுபத்தாறு அடி அகலமும் தெற்கு வடக்காக நானூற்று ஏழு அடி நீளமும் கொண்டது; இந்த அளவுள்ள நிலப்பரப்பின் நடுவில் குற்றால நாதர் கோவிலும், அவருக்கு வலப்பக்கம் அம்மன்கோவிலும், இடப்பக்கம் பராசக்தி கோவிலும் தனித்தனியாக அமைந்துள்ளன. இம் மூன்று கோவில்களுக்கும் பொதுவான திருச்சுற்று உண்டு. அதற்குச் சங்க வீதி என்பது பெயர். மகா சந்தனாதித் தைலம் திருமாலாக இருந்தவர் தலைமீது அகத்தியர் -கையை வைத்து அழுத்திச் சிவலிங்கமாக்கிய காரணத் தால், குற்றால நாதருக்குத் தலைவலி உண்டாயிற்று என்று கொண்டு, அதற்காக நாடோறும் மகா சந்த னாதித்தைலம் தயாரித்து அத் தலைவலியைப் போக்கத் திருமுழுக்காட்டுவது வழக்கம். கோவிலில் இத்தைலத் தைத் தயாரிக்கத் தனியறை உண்டு. இந்தத் தைலம் பல மூலிகைகளையும் 'மருந்துச் சரக்குகளையும் சேர்த்து மருத்துவ முறைப்படி செய்யப்படுகிறது. இது தலை வலி, வயிற்றுவலி முதலிய நோய்களை நீக்கவல்லது. இறைவனுக்குத் திருமுழுக்காட்டிய தைலம், படி இரு யத்திரண்டரை ரூபாய் வீதம் விற்கப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/111&oldid=1693071" இலிருந்து மீள்விக்கப்பட்டது