பக்கம்:அருவிகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 துணைப் பாடம் வாழைமரம் சாய்ந்து ஒரு தாழம்புதர்மீது விழும். அதனால் வாழை பரப்பிய 'குருத்திலே தாழம்பூ சோறு போல அமைந்து வருவோருக்கு விருந்து படைக்கும் நிலையிற் காணப்படும். இத்தகைய இயற்கை வளம் உடையது தனது தென்னாரிய நாடு என்று குறத்தி தன்நாட்டு வளத்தைச் சிறப்பிக்கிறாள். அந்நாட்டில் ஓடக் காண்பது ஆற்று வெள்ளமே; ஒடுங்கியிருப்பது யோகியர் உள்ளமே; வருந்திக்கொண்டிருப்பவை கருக்கொண்ட சங்குப் பூச்சிகளே; மங்கையர் காலிற் கிடக்கும் கிண்கிணி ஒன்றே அங்குப் புலம்பிக் கொண்டிருக்கும். தன் நாட்டு மக்கள் நல்லறம், புகழ் இவற்றையன்றி வேறு எதனையும் தேடுவதில்லை என்று குறவஞ்சி தன் நாட்டு வளத்தை நயமாக உரைக்கின்றாள். நகர வளம் குற்றால நகரில் பாயும் சிற்றாற்றின் தோற்றத்தை யும், தேனருவித்துறை, செண்பக அருவித்துறை, வட அருவி முதலியவற்றின் சிறப்பையும், முனிவர் தேவர் மனிதர் முதலிய பலரும் இத்தலத்தில் திரிகூட நாதரை வழிபட்டு வரம்பெற்ற மேன்மையையும், சித்தர், யோகியர் முதலியோர் அங்கு வாழும் நிலைமை யையும் குறத்தி கூறி நகரச் சிறப்பை நன்கு விளக்கு கின்றாள். குற்றால நாதர்க்குரிய மலைவளமும் நாட்டு வள மும் நகர வள மும் குறவஞ்சிபால் கேட்டு மகிழ்ந்த வசந்தவல்லி, அப்பெருமானது சுற்றத்தையும் அவள் வாயிலாகவே அறிகின்றாள்; அறிந்த பின்பு தனக்குக் குறி சொல்லுமாறு குறத்தியை வேண்டுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/124&oldid=1693083" இலிருந்து மீள்விக்கப்பட்டது