பக்கம்:அருவிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 துணைப் பாடம் பெருங்கடலில் கலக்கிறது. ஆதலால் அவர்கள் அப் பாம்பாறு வழியே சென்று எளிதில் பசிபிக் பெருங் கடலை அடைந்தனர். சென்றவர் மீண்டனர் இவ்வாறு பல துன்பங்களை நுகர்ந்து பெரிய மலைத் தொடரையும், பெருங்காடுகளையும் கடந்து சென்று, பசிபிக் பெருங்கடலைக் கண்ட பிரயாணிகள், பெருமகிழ்ச்சி அடைந்தனர்; தங்கள் உழைப்பு, பயன் அளித்தது கண்டு உள்ளம் பூரித்தனர். அவர்கள் அங்குத் தங்கி மாரிக்காலத்தைக் கழித்தனர்; 1806 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 23ஆம் நாள் கிழக்கு நோக்கித் திரும்பினர்; தம்முடன் நெருங்கிப் பழகிய அமெரிக்க இந்தியர் வழி காட்டிக்கொண்டு வர, விரைந்து நடந்தனர். முன்பு பட்ட துன்ப அநுப வங்கள் இப்பொழுது அவர்களுக்குப் பெருந்துணை புரிந்தன. அவர்கள் முடிவில் செயின்ட் லூயி வந்து சேர்ந்தனர். முயற்சியும் உயர்ச்சியும் பசிபிக் பெருங் கடலைக் கண்டு மீள அவர்கள் ஏறத்தாழ 9,000 கல் தொலைவு பிரயாணம் செய்தனர். அவர்கள் இப்பிரயாணத்தில் அமெரிக்க இந்தியரு டைய எ திர்ப்புகளைச் சமாளித்தனர்; கதிரவன் ஒளி படாத காடுகளில் கொடிய விலங்குகளுடன் போராடி வழி நடந்தனர்; வானளாவிய ராக்கி மலைத் தொட ரைக் கடந்தனர்; ஆங்காங்குப் படகுகளிற் செல்லுங் கால் ஆற்று வெள்ளத்தைச் சமாளித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/19&oldid=1692979" இலிருந்து மீள்விக்கப்பட்டது