பக்கம்:அருவிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நயாகரா அருவி 19 அப்பெரு மக்களுடைய துணிச்சல், துன்பங்களை இன்பமாகக் கருதும் மனப் பண்பு, எப்பாடுபட்டே னும் புதுமை காணவேண்டு மென்னும் வேட்கை முதலிய நற்பண்புகள் அவர் தம் பெயர்களை அமெரிக்க வரலாற்றில் பொறிக்கச்செய்தன. குடியரசுத் தலைவரான ஜெப்பர்ஸன் அவர்களைப் பாராட்டினார்; லூசியானா நாட்டின் வடபகுதிக்கு லூவிஸைக் கர்ன ராக நியமித்தார்; கிளார்க்கை மிசௌரி மாகாண த்தின் கவர்னராக்கினார். இங்ஙனம் பொதுநலனுக்குத் தந்நலத்தைத் தியாகம் செய்த பெருமக்களாற்றான் ஒவ்வொரு கண் டத்திலும் உள்ள மலைத் தொடர்கள், ஆறுகள், ஏரி கள், அருவிகள் முதலியன கண்டறியப்பட்டன; அவற்றின் விவரங்களும் உலகிற்கு அறிவிக்கப்பட் டன. வட அமெரிக்காவில், உழைப்பால் உயர்ந்த இப்பெருமக்களால் கண்டறியப்பட்ட புதுமைகளுள் அருவிகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் உல கப் புகழ் பெற்ற நயாகரா அருவியைப் பற்றிய விவ ரங்களை இனிக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/20&oldid=1692980" இலிருந்து மீள்விக்கப்பட்டது