பக்கம்:அருவிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 20 துணைப் பாடம் 2. நயாகரா அருவி நயாகரா ஆறு வட அமெரிக்காவில் ஐக்கிய மாகாணங்களையும் கனடாவையும் பிரிக்கும் முறையில் ஐந்து ஏரிகள் அமைந்திருக்கின்றன. அவை முறையே சுபீரியர் ஏரி, மிச்சிகன் ஏரி, ஹியூரன் ஏரி, ஈரி ஏரி, ஒன்டேரி யோ ஏரி என்பன. இலட்சக் கணக்கான நீரூற்றுக் கள் மென்மையும் தெளிவும் கொண்ட நீரை முதல் நான்கு ஏரிகளிலும் சேர்க்கின்றன. கடல் போல் பரந்துள்ள சுபீரியர் ஏரியில் நீர் நிரம்பி வழிந்து ஹியூ ஏன், மிச்சிகன் ஏரிகளில் பாய்கின்றது. இம்மூன்று ஏரிகளின் நீரும் ஒன்றாகி, ஈரி என்னும் ஏரியில் விழுகின்றது. இந்த நான்கு ஏரிகளின் நீர் நயாகரா என்னும் ஆறாகத் தோற்றமெடுத்து, ஒன்டேரியோ ஏரியில் கலக்க வடகிழக்கு நோக்கிச் செல்லுகிறது. இந்த ஆற்றின் கிழக்குக் கரை அமெரிக்க ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்தது; மேற்குக்கரை கனடா நாட்டைச் சேர்ந்தது. இந்த ஆற்றின் நீளம் ஏறத் தாழ் முப்பத்து நான்கு கல். இந்த ஆற்றின் தொடக்கத்திலிருந்து இருபது கல் தொலைவு வரை ஆற்று நீர் மெதுவாகச் செல்வதால் கப்பல் போக்கு வரவு நடைபெற வசதியிருக்கின்றது. ஒன்டேரியோ ஏரியிலிருந்து ஏழுகல் வரையில் இந்த ஆறு மீண்டும் தன் கம்பீரமான நடையுடன் மெதுவாகச் செல்வதால், கப்பல் போக்குவரவு எளிதில் நடைபெறுகின்றது. இடைப்பட்ட ஏழு கல் தொலைவில் பல செங்குத்தான நீர் இறக்கங்களும் நீர்ச் சுழல்களும் உள்ளன. முதல் ருபது கல் தொலைவு வரையில் ஒரு கல்லுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/21&oldid=1692981" இலிருந்து மீள்விக்கப்பட்டது