பக்கம்:அருவிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 22 துணைப் பாடம் ராவர். மிகப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரிகள் உள்ள பகுதியில் அடிக்கடி உண்டாகி உருகிக் கொண்டிருந்த பனிக்கட்டி மலைகள் அந்நிலப்படுகை யை அரித்து தண்ணீர் செல்வதற்கு ஒரு வழியை உண்டாக்கின. இங்ஙனம் உண்டாக்கப்பட்ட வழியிற் பாய்வதே நயாகரா ஆகும். இங்ஙனம் இந்த ஆறு தோன்றிய காலம் இன்னது எனத் திட்டமாகக் கூற முடியவில்லை; ஆயினும் இஃது ஏறத்தாழ இருபத்தை யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருத்தல் வேண்டும் என்று ஒருவாறு கூறலாம் என ஆராய்ச்சி யாளர் அறைகின்றனர். போக்கு வரவு ஈரி ஏரிக்கும் ஒன்டேரியோ ஏரிக்கும் இடையில் ஒரு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழி யாகவே போக்குவரவு நடைபெறுகின்றது. இக்கால் வாய் அமைக்கப்படுவதற்கு முன் பழைய கால்வாய் ஒன்று இருந்தது. அதில் இருபத்தைந்து மதகுகள் இருந்தன. ஒவ்வொரு மதகும் 270 அடி நீளமும் 45 அடி அகலமும் உடையது. கனடா அரசாங்கத்தால் கட்டப்பட்ட இரண்டாம் கால்வாய் 1931இல் படகுப் போக்குவரவுக்காகத் திறந்து விடப்பட்டது. இப் புதிய கால்வாயின் தென் பகுதி பெரும்பாலும் பழைய கால்வாயின் விரிவே என்னலாம். இக்கால்வாயின் வடபகுதி ஒரு புதுவழியே சென்று போர்ட்வெல்லர் என்னும் இடத்தில் ஒன்டேரியோ ஏரியுடன் கலக்கின் றது. இப்புதிய கால்வாய் 25 கல் நீளமுள்ளது. இதற்கு நான்கு தனி மதகுகள் உண்டு. அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/23&oldid=1692983" இலிருந்து மீள்விக்கப்பட்டது