பக்கம்:அருவிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

படாது நயாகரா அருவி 25 என்று அறிஞர் கூறுகின்றனர். பிளவு மிகுதிப்படாமல் இருக்கவும், அமெரிக்க அருவிக்குச் செல்லும் நீர் குறையாமலிருக்கவும் இரு அரசாங்கங் களும் தக்க ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன. உயர்ந்த பெரிய பாறையைச் சுற்றி இரு பிரிவு களாக நயாகரா ஆறு பிரிந்து செல்வதால், இடையி லுள்ள பாறைப்பகுதி ஒரு தீவாகக் காட்சியளிக்கின் றது. அத்தீவு *வெள்ளாட்டுத் தீவு என்று பெயர் பெறும். இரண்டு ஆற்றுப்பகுதி நீரும் கீழே விழு கின்ற இடங்களுக்கு இடைப்பட்ட தூரம் ஆயிரத்து முன்னூறு அடியாகும். குதிரை லாட அருவிக்குக் கீழ் இருநூற்றைம்பது அடி உயரமுள்ள செங்குத்தான பாறைச் சுவர்கள் இருக்கின்றன. அவற்றின் இடை யேதான் அருவி நீர் பேரிரைச்சலுடன் பாய்கின்றது. அது பாயும் பகுதியில் பல நீர்ச்சுழல்கள் உண்டாகின் றன. அருவிநீர் விழுந்து செல்லும் பாதையில் சில சிறு தீவுகள் அமைந்திருக்கின்றன. அவை அருவி களுக்கு அண்மையிலேயே இருப்பவை. வியத்தகு இவ்விரண்டு அருவிகளை அடுத்துள்ள தீவுகளையும் நயாகரா ஆற்றங்கரையோரமாக உள்ள அழகு வழியும் இடங்களையும் இரு நாட்டு அரசாங்கங் களும் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளன. அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் அமைத்துள்ள பூங்கா பிராஸ்பெக்ட் பூங்கா என்பது. இது 1885 முதல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. கனடா அரசாங்கம் குதிரை லாட அருவிக்கு அருகில் உள்ள எழில்

  • Goat Island † Prospect
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/26&oldid=1692986" இலிருந்து மீள்விக்கப்பட்டது