பக்கம்:அருவிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நயாகரா அருவி 27 அமெரிக்காவிலுள்ள வேறு எந்த இயற்கைக் காட்சி யையும் பார்க்கச் செல்வோர் தொகையைவிட மிகுதி யாகும். ஆதலால் அதன் கலையழகைக் காப்பாற்ற அவ்வருவிகளிலிருந்து இரு நாடுகளும் மின்சார உற்பத்திக்காக எடுத்துக்கொள்ளும் நீரின் அளவு, ஒரு சர்வதேச உடன்படிக்கைப்படி வரையறுக்கப்பட் டுள்ளது. கனடா ஒரு வினாடிக்கு முப்பத்தாறாயிரம் கன அடி நீரும், அமெரிக்க ஐக்கிய நாடுகள் இருப தாயிரம் கன அடி நீரும் எடுத்துக்கொள்ளலாம் என்று அவ்வுடன்படிக்கை கூறுகின்றது. ஐக்கிய மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரிலிருந்து ஐந்து லட்சம் குதிரைச் சக்தி விசை யுடைய இயந்திரங்கள் மின்சக்தியை உற்பத்தி செய் கின்றன. ஐக்கிய மாகாணங்களில் வாழும் மக்களுள் ஏறத்தாழப் பாதித் தொகையினருக்கு இங்ஙனம் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியே பயன்படுகின் றது. இங்ஙனம் எடுக்கப்படும் மின்சக்தி 1879இல் முதன் முதலாகப் பிராஸ்பெக்ட் பூங்காவுக்கு வெளிச் சம் தரவே பயன்படுத்தப்பட்டது; 1881 இல் வணிகர் கள் பயன்படுத்தவும் விற்கப்பட்டது. கனடாவுக்கு ஒதுக்கப்பட்ட நீரில் பதினாயிரம் கன அடி நீர் தவிர எஞ்சிய தண்ணீர் முழுமையும் மின் சக்தி எடுக்கவே பயன்படுகிறது. மூன்று மின் சக்தி நிலையங்கள் இப்பணியை ஆற்றுகின்றன. அம்மின் சக்தியின் பெரும்பகுதி அலுமினியம், குளோரின் திரவம், கால்சியம் கார்பைட் முதலிய பொருள்களை உண்டாக்கும் தொழிற்சாலைக்குப் பயன்படுகிறது. எஞ்சிய பகுதி பல நகரங்களுக்கு விளக்கெரிக்கவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/28&oldid=1692988" இலிருந்து மீள்விக்கப்பட்டது