பக்கம்:அருவிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விக்டோரியா அருவி 35 கலஹாரிப் பாலைவனமும் அமைந்துள்ளன. சகாராப் பாலைவனம் ஆப்பிரிக்காவின் பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியாக இருக்கின்றது. இதற்கு வடக்கேயுள்ள மத்திய தரைக் கடற்பகுதியும், கலஹாரிக்குத் தெற்கே யுள்ள கடற்கரைப் பகுதியும் செழிப்பான நிலப்பகுதி களாகும். கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள இத்தியோப் பியா என்னும் பகுதி மேட்டுப் பகுதியாகும். மிக்க உயரமுள்ள மலையுச்சிகள் கிழக்கு ஆப்பிரிக்காவிலேயே இருக்கின்றன. இருள் கவிந்த கண்டம் வட ஆப்பிரிக்காவில் நைல் ஆறு பாயும் எகிப்து என்னும் நாடு வளமுடையது. அஃது ஏறத்தாழ ஆறாயிரம் ஆண்டுகளாக வரலாற்றுச் சிறப்புடையது. அதற்கு மேற்கேயுள்ள வட ஆப்பிரிக்காப் பகுதி முழு வதும் சகாராப் பாலைவனமாகக் காட்சியளிப்பதாலும், தெற்கில் கலஹாரிப் பாலைவனம் பரவியிருப்பதாலும், இவற்றைத்தாண்டி உள் நாட்டிற் புகுந்து ஆராய்ச்சி செய்ய ஐரோப்பியரால் முடியவில்லை. கண்டத்தின் நடுப்பகுதி அடர்ந்த காடுகளை உடையது. ஆதலால் அக்காடுகளைத் தாண்டிச் செல்லவும் இயலவில்லை. கண்டத்தின் உட்பகுதியிலிருந்து தோன்றிக் கிழக் கிலும் மேற்கிலும் செல்லும் பேரியாறுகள் நீர்ச்சுழல் களையும் விரைவான நீரோட்டங்களையும் பெற்றுள்ள காரணத்தால், அவ்யாறுகளின் வழியாகக்கண்டத்தின் உட்பகுதிக்குச் செல்லவும் முடியவில்லை. இக் காரணங்களால் ஐரோப்பியர் இப்பெருங் கண்டத் தின் கரையோரப் பகுதிகளை மட்டும் அறிந்திருந் தனரே அன்றி, உட்பகுதியை அறியக் கூடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/37&oldid=1692997" இலிருந்து மீள்விக்கப்பட்டது