பக்கம்:அருவிகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 துணைப் பாடம் இதனால் கண்டத்தின் உட்பகுதியைப் பற்றிய தெளி வான அறிவு அவர்களுக்கு இல்லாதிருந்தது. இத னாற்றான் அவர்கள் ஆப்பிரிக்காவை இருள் கவிந்த கண்டம்' என்று கூறிவந்தனர். இருள் நீக்கம் 6 ஊக்கம், உழைப்பு, துன்பங்களை ன்பமாகக் கருதும் மனப்பண்பு, பொறுமை இவற்றை அணி கலனாகக் கொண்டு இரண்டு துருவங்களையும், பல்லா யிரம் கல் தொலைவு பரந்து கிடக்கும் கடற்பரப்பி லுள்ள கணக்கற்ற தீவுகளையும் கண்டறிந்து உலகத் தையே சுற்றி வந்த ஐரோப்பியர், 'ஆப்பிரிக்கா இருண்ட கண்டம்' என்று கூறியதோடு நின்று விட வில்லை; மேற்கு ஆப்பிரிக்காவையும் கிழக்கு ஆப்பிரிக் காவையும் தென் ஆப்பிரிக்காவையும் படிப்படியாக ஆராயத் தலைப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்காவைப் பற்றிய விவரங்களை உலகறியச் செய்த பெருமை * மங்கோ பார்க்கு என்ப வரையே சாரும். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்; 1771இல் பிறந்தவர்; கற்றார் பேருரை களைக் கேட்டுக் கலையுணர்ச்சி பெற்றவர்; மருத்துவத் துறையிலும், இயற்கைப் பொருள்களை ஆய்வதிலும், சிறந்த பயிற்சி உள்ளவர். இயற்கைப் பொருள்களை ஆராய்வதிலும், புதிய இடங்களைக்காண்பதிலும் இவர் உள்ளம் ஈடுபட்டது; அதனால் பல நாடுகள் செல்லும் கப்பல் ஒன்றில் மருத்துவராக வேலை பார்க்கத் தொடங்கினார். அக்காலத்தில் பல நாடுகளையும்

Mungo Park

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/38&oldid=1692998" இலிருந்து மீள்விக்கப்பட்டது