பக்கம்:அருவிகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மங்கோ பார்க்கு

________________

விக்டோரியா அருவி 37 கண்டறிய வேண்டும் என்று ஆவலோடு இங்கிலாந் தில் ஒரு கழகம் பணியாற்றிவந்தது. அக்கழகத்தார் ஆப்பிரிக்காவைப் பற்றிய தக்கார் ஒருவரை அனுப்ப வேண்டுமென்று விழைந் தனர். அவர் விருப்பத்தை அறிந்த மங்கோ பார்க்கு, தாம் அப்பணியில் ஈடுபடு வதாகக் கூறினார். அவ ருடைய தகுதிகளை நன்கு உணர்ந்த கழகத்தார், அவர் தலைமையில் சிலரை அனுப்பினர்; "மேற்கு ஆப் பிரிக்காவிலுள்ள நைஜர் என்னும் பேரியாற்றின் போக்கையும், அப்பகுதி உண்மைகளை அறியத் மங்கோ பார்க்கு யில் உள்ள மக்களுடன் தொடர்புகொண்டு வாணிகம் நடத்த வசதி உண்டா என்பதையும் ஆராய்ந்து வருக," என்று கூறினர். பார்க்கின் *செலவு மங்கோ நாடுகாணும் முயற்சியில் ஈடுபட்ட பார்க்கு 1795ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து கப்ப லில் புறப்பட்டார்; ஒரு திங்கள்வரை மேற்கு ஆப்பி ரிக்காவின் கரையோரமாகச் சென்று, காம்பியா என் னும் பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் தம் கப்பலை நிறுத்திக் கரையை அடைந்தார்; உள் நாடு செல்ல அப்பேரியாறே தக்க சாதனமாக இருப்பதை அறிந்து, * பிரயாணம் † Gambia

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/39&oldid=1692999" இலிருந்து மீள்விக்கப்பட்டது