________________
விக்டோரியா அருவி 39 இரவு அங்கிருந்து தப்பித் தன் குதிரைமீது ஏறிக் கொண்டு, அடுத்த நாட்டிற்குச் சென்றார். நைஜர் ஆறு இவ்வாறு சென்ற அவர், வழியில் நைஜர் என் னும் பேரியாற்றைக் கண்ணுற்றார்; பளிங்கு போன்ற அதன் நீரைத் தம் ஆவல் தீரப் பருகினார்; பரந்த வெளியில் தெளிவுடன் ஓடும் அப்பேரியாறு அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. அப்பகுதிக்கு உரிய அர சன் அவரை உடனே தன் நாட்டை விட்டு ஏகுமாறு கட்டளையிட்டான். பாவம்! பார்க்கு அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு மற்றோர் நகரம் நோக்கி வழி நடக்க லானார். அவர் காட்டு வழியே செல்லுகையில், அரிமா ஒன்று குறுக்கிட்டது. அதனை நேரிற் கண்ட பார்க்கு நடுநடுங்கினார். நல்ல காலம்! அவர் அவ்வரிமா வின் நோக்கிலிருந்து தப்பிப் பிழைத்தார். அவர் நைஜர் ஆற்றின் கரைமீதே சென்றார். அவரது குதிரை மேலும் நடந்து செல்ல முடியாமல் தவித்தது. அதனால் அவர் அதனை விட்டுவிட்டு வழி நடந்தார். அவர்க்குத் துணையாகச் சென்ற வழிகாட்டியும் அவரை விட்டுப் போய்விட்டான். அவர் அணிந் திருந்த உடைகள் கிழிந்துவிட்டன. அந்நிலையில் மாரிக்காலம் தொடங்கிவிட்டது. நைஜர் ஆற்றின் ஓரமாயுள்ள டிம்பக்டூ என்னும் பெரிய நகரத்தை அடையவேண்டும் என்று பார்க்கு விரும்பினார். ஆயினும், பல இன்னல்களால் அவர் அப்பெருநகரை அடையக்கூடவில்லை. அதனால் அவர் தாம் வந்த வழியே திரும்ப வேண்டியவரானார்.
- Timbuktoo