பக்கம்:அருவிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விக்டோரியா அருவி 41 நாட்டு முரடர் பலர் இரு கரைகளிலும் இருந்து பார்க்குக் குழுவினரைத் தாக்கினர். அச்சுதேசிகள் கவண் கற்களையும், எறி ஈட்டிகளையும் குழுவினர்மீது வீசினர். படகில் இருந்து அவர்களை எதிர்க்கப் பார்க்குக் குழுவினரால் முடியவில்லை. அவர்களிட மிருந்து தப்ப வேறு வழியின்றி அனைவரும் ஆற்றில் குதித்தனர். அந்தோ! அங்ஙனம் குதித்தவர் எவரும் கரையேறவில்லை. பார்க்கின் முடிவு இரங்கத் தக்க தன்றோ! மேற்கு ஆப்பிரிக்காவைக் கண்டறிய முயன்ற பார்க்கின் உள்ளத் துணிவையும், அவர் பட்ட இன் னல்களையும், அவர் அடைந்த முடிவையும் அவரைப் பற்றிய வரலாற்றில் விரிவாகக்காணலாம். இப்பெரு உயிர்த் தியாகத்தாலும் மகனது உழைப்பாலும், மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய நகரங்களைப் பற்றியும், வாணிகம் செய்ய இருந்த வசதி பற்றியும் அப்பகுதியில் வாழும் பல்வேறு இன மக்களைப் பற்றி யும் பல விவரங்கள் ஐரோப்பியருக்குத் தெரியலாயின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/43&oldid=1693005" இலிருந்து மீள்விக்கப்பட்டது