பக்கம்:அருவிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

$64 துணைப் பாடம் பரப்புகின்றன. வெண்மையான நீர்த்துளிகள் மின் னுகின்ற இரத்தினக் கற்களைப் போலக் கதிரொளி யில் காட்சியளிக்கின்றன. அரைக்கல் தொலைவுக்கு அருவியின் நீரில் விரிந்து கிடக்கும் நுறையடுக்குகள் காணத்தக்கவை. விக்டோரியா அருவியின் நான்கு பிரிவுகளுள் பெரியதாக இருக்கும் அருவி அழகுக் காட்சியை நல்குகின்றது. பேரோசையை முழக்கி எழுப்புகின்றது; நீர்த்துளி பரந்த முகிற்படலத்தை உண்டாக்குகின்றது. பவர் காட்சியழகு நிறைந்த மழைக் காட்டில், பார்ப் உள்ளத்தைக் கவரத்தக்க நூற்றுக்கணக்கான சிற்றருவிகள் பாய்கின்றன. இக்காட்டில் உள்ள ஆழமும் குறுகலும் உடைய கணவாயின் தோற்றம் அழகியது. இக்கணவாயிலிருந்து மலை முகட்டைப் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. அருவி வெள்ளம் நீர்மட்டம் மிகுதியாகவுள்ள காலத்தில் விக்டோ ரியா அருவி காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. அதன் நீராற்றல் உள்ளத்தில் பேரச்சத்தை விளைவிக்கின்றது. த அவ்வமயம் அருவி யின் தோற்றமும் கணவாயின் தோற்றமும் கண் களுக்குப் புலப்படுவதில்லை. நீர்மட்டம் குறைந் துள்ள காலத்திலும், அருவியின் நீர்ப்படலம் அருகி லுள்ள மழைக்காட்டின் காட்சியை மூடி மறைக் கின்றது. வெள்ளப்பெருக்கம் உண்டாகும் காலத்தில் காண்போர் மனக்குழப்பமும், மனக்குறையும் அடை யும்படி அடர்த்தியான நீர்ப்படலம் வானவெளி எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/66&oldid=1693027" இலிருந்து மீள்விக்கப்பட்டது