பக்கம்:அருவிகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விக்டோரியா அருவி 65 யரவி நிற்கின்றது. இதனால் அருவியின் தோற்றத் கதைக் காண்பது இயல்வதில்லை. வெள்ளப் பெருக்கு நேரும் காலத்தில் மலை யருவியைக் கடந்து லிவிங்ஸ்டன் தீவுக்குச் செல்லு தல் இயலாது. கோடைக் காலத்தில் அத்தீவிற்குச் சென் று அருவியின் அழகைக் கண்டு அகமகிழலாம். இன்பக் காட்சிகள் பெரிய அருவிக்கு எதிரேயுள்ள மலைமுகடு எழில் மிக்கது. கரிய பழுப்பு நிறப் பாறைகள் தலை நிமிர்ந்து நிற்கின்றன; சில இடங்களில் கரிய நிறப் பாறைகள் தோன்றுகின்றன; முன் சொல்லப்பட்ட மழைக்காடு மரப்பச்சை போர்த்த வடிவத்தில் காணப்படுகிறது; இங்கும் அங்கும் ஊடு பாய்ந்து ஒளிரும் கதிரொளி வெண்ணிறத்தை வழங்குகிறது; நீர்த் துளிகளால் உண்டான பற்பல நிற மண்டலங்களாகத் தோன்றும் வானவில் மின்னுகிறது. இவை அனைத்தும் பார்ப் பவர் உள்ளங்களைப் பரவசப்படுத்தும் இன்பக் காட்சி களாகும். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/67&oldid=1693028" இலிருந்து மீள்விக்கப்பட்டது