பக்கம்:அருவிகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 IV சிவசமுத்திர அருவி 1. காவிரி யாறு காவிரியின் சிறப்பு வட இந்தியாவில் புகழ்பெற்ற ஆறு கங்கை அது போலவே தென்னாட்டு மக்களால் தென்னிந்தியாவில் காவிரியாறு போற்றப்படுகிறது. இந்த ஆறு சோழ நாட்டின் வளத்திற்கே காரணமாக விளங்குகின்றது. இது குடகு நாட்டில் பிறந்து, மைசூர் நாட்டில் தவழ்ந்து, கொங்கு நாட்டில் நடந்து, சோழ நாட்டில் பல கிளைகளாகப் பிரிந்து அந் நாட்டை வளப்படுத்தி, வங்கக் கடலில் கலக்கிறது; சோழநாட்டில் எங்கு நோக்கினும் ஆறுகள், வாய்க் கால்கள், நீர்நிலைகள் என்று சொல்லும்படி அந் நாட்டைப் 'புனல் நாடு' என்று புலவர்கள் போற்றும் படி செய்துள்ளது. இங்ஙனம் தம் நாட்டை படுத்தி வந்த காரணத்தாற் சங்ககாலச் மன்னர்கள், காவிரியைத் தம் 'குலக்கொடி' என்று கொண்டு போற்றி வந்தனர். இந்த உண்மையை, மணிமேகலை ஆசிரியராகிய சீத்தலைச் சாத்தனார், "பாடல்சால் சிறப்பில் பரதத்து ஓங்கிய வளப் சோழ கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி” என்று தம் மணிமேகலைக் காவியத்தில் பாராட்டி யுள்ளதைக் கொண்டும், இளங்கோவடிகள், "சோழர் தம் தெய்வக் காவிரி" என்று தாம் பாடியுள்ள சிலப்பதி காரத்தில் பாராட்டியிருத்தலைக் கொண்டும் நன்கு உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/68&oldid=1693029" இலிருந்து மீள்விக்கப்பட்டது