பக்கம்:அருவிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவசமுத்திர அருவி மக்களது போற்றுதல் 62 67 சோணாட்டு மக்கள் தமக்கு நீர் வளத்தைத் தந்து நிலவளத்தை உண்டாக்கித் தங்களை வையத்தில் வாழ்வாங்கு வாழ்விக்கும் இப் பேரியாற்றைத் தம் தாயாகவே கருதி வழிபட்டுவந்தனர்; ஆண்டுதோறும் ஆடிமாதம் பதினெட்டாம் பெருக்கன்று ஆண்களும் பெண்களும் காவிரி நீரில் நீராடி மகிழ்ந்து, மாவிளக்கு முதலியவற்றைப் படைத்துக் காவிரித்தாயை வணங் கினர். சோணாட்டுச் சிறுவரும் சிறுமியரும், தாய்மீது தவழ்ந்து விளையாடும் குழந்தைகளைப் போல, ஆற்று நீரில் குதித்தும் நீந்தியும் விளையாடியும் மகிழ்ந்தனர். இங்ஙனம் காவிரியாற்றுக்கு வழிபாடுசெய்தலும், புது வெள்ளத்தில் குதித்து விளையாடுதலும், இன்றளவும் நடை பெற்று வருகின்ற செயல்களாகும். தண்டமிழ்ப் பாவை "வெள்ளி என்ற விண்மீன், தான் நிற்பதற்குரிய வடதிசையிலிருந்து மாறித் தென் திசைக்குச் சென்றா லும், மழைத்துளியை உணவாகக் கொண்டு வானைப் பாடி வாழும் வானம்பாடிப் பறவை உணவின்றி வருந்தும்படி வானம் வளம் சுரக்க மறுத்தாலும், நீர் வளம் சுரத்தலில் காவிரியாறு தவறாது," என்று காவிரியாறு வற்றாது வளங்கொழிக்கும் இயல்பைச் சங்ககாலப் புலவராகிய கடியலூர் உருத்திரங் கண் ணனார் உளமாரப் பாராட்டியுள்ளார். முகில்கள் நிலை மாறினமையால் மழைபெய்யாது கோடைக் காலம் மக்களை மிகுதியாக வருத்தும் பொழுதும், காவிரியாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/69&oldid=1693030" இலிருந்து மீள்விக்கப்பட்டது