பக்கம்:அருவிகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவசமுத்திர அருவி 69 யதாக இருந்தது என்று புலவர்கள் பாடியுள்ளதை நோக்க, குடகு மலை முதல் சோழ நாடுவரை காவிரி யாற்றில் அணைகள் இல்லை என்று கருத இடமுண் டாகிறது. "வாழி காவேரி" "காவிரியில் புதுப்புனல் பெருக்கெடுத்துப் பாய்ந்த பண்டைக் கால லத்தில், உழவர்கள் ஆரவாரத் துடன் வயல் வேலைகளில் ஈடுபட்டனர். மதகுகளின் வழியே நீர் சலசல எனப் பாய்ந்தோடியது; நீர்ப் பெருக்கால் கரைகள் சிற்சில இடங்களில் உடைந்தன ; அதனால், அவ்விடங்களில் ஆற்று நீர் பேரிரைச்ச லோடு பெருகிப் பாய்ந்தது.ஆண்களும் பெண் களும் புதுப்புனலாடி மகிழ்ந்தனர். இவ்வாறு உழவர் ஆரவார முழக்கமும், மதகுகளில் நீர் பாய்ந்த ஒலியும், உடைந்த கரையில் நீர் பாய்ந்த ஓசையும், மக்கள் புது வெள்ளத்தில் நீராடிய ஆர்ப்பும் கலந்து ஒலிக்கக் காவிரித்தாய் நடந்து வந்தாள்," என்று இளங்கோவடிகள் தாம் பாடிய சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ் நூலில் காவிரியின் நீர்ப் பெருக்கால் உண் டான நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்: "உழவர் ஓதை மதகு ஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி. சிலப்பதிகாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/71&oldid=1693032" இலிருந்து மீள்விக்கப்பட்டது