பக்கம்:அருவிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவசமுத்திர அருவி 77 அங்ஙனம் பாயும்பொழுது இதன் வழியில் இடை யிடையே சிறிய தீவுகள் அமைந்துள்ளன. அவற்றுள் "பெரியது சீரங்கப்பட்டணம் என்பது. இப்பகுதியில் லோக பவானி என்னும் ஒரு சிற்றாறு காவிரியில் கலக்கின்றது. சிறிது தொலைவுக்கு அப்பால் கப்பினி என்னும் சிற்றாறு காவிரியில் கலக்கின்றது. பின்னர்க் காவிரி கிழக்காகத் திரும்பிச் சிறிது தொலைவு பாய்ந்து மீண்டும் தெற்கு நோக்கித் திரும்புகிறது. அங்ஙனம் திரும்பிப் பாயும் இடத்தில் கங்க நாட்டுத் தலைநகர மான வரலாற்றுப் புகழ்பெற்ற தாலக்காடு என்ற நகரம் அமைந்துள்ளது. சிவசமுத்திர அருவி தாலக்காட்டுக்கு அப்பால் சிறிது தொலைவில் காவிரியாற்றில் சுவர்ணாவதி என்னும் சிற்றாறு கலக் கின்றது. முன்பே பல துணையாறுகளின் வலிமை யால் பெருக்குற்ற காவிரி, இப்புதிய ஆற்றின் கூட் டுறவால் மேலும் பெருக்குற்றுப் பாய்கிறது. குறிப் விட்ட ஓர் இடத்தில் அதன் போக்கு ஓர் உயர்ந்த நிலப்பகுதியால் தடுக்கப்படுகிறது. அதனால் காவிரி யாறு இரண்டாகப் பிரிந்து அம்மேட்டு நிலப் பகுதியைச் சுற்றிக் கிழக்கில் ஒன்றும் மேற்கில் ஒன்று மாகப் பாய்கிறது. காவிரியாற்றின் இவ்விரு கிளை கட்கும் இடையில் அமைந்துள்ள மேட்டு நிலமே சிவசமுத்திரம் என்னும் தீவாகும். இத்தீவு கண் கவரும் மலைவனப்பு மிக்கது; பசுமையான காடுகள் நிறைந்தது; மூன்று கல் நீளமும், முக்கால் கல் அகல மும் உடையது. மரம் செறிந்த இதன் காடுகளில் கொடிய விலங்குகள் வாழ்கின்றன. இத்தீவில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/79&oldid=1693040" இலிருந்து மீள்விக்கப்பட்டது