பக்கம்:அருவிகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 துணைப் பாடம் விஞ்ஞானிகள் கூற்று "மிகப் பழைய காலத்தில் அமைதியும் அசைவின் மையும் இருளுமே எங்கும் பரவியிருந்தன; அப் பொழுது *சூக்கும செய்நீர் ஒன்றே நிலவியிருந்தது; பின்பு அசைவு அல்லது இயக்கம் தோன்றியது; அதன் பயனாகச் சூக்கும செய்நீர் உயிர் பெற்றது; உலகம் உயிர்த்தெழலாயிற்று; சூரியனும் சந்திரனும் கிரகங்களும் தோன்றின; இருளில் ஒலி தோன்ற லாயிற்று. இங்ஙனம் உலகம் தோன்றியிருத்தல் வேண்டும்," என்று விஞ்ஞானிகள் கூறுவர். "புலவன் கை அசைவினால் ஒரு நூல் வெளிப்படுதல் போல, நம் கட்புலனுக்குப் புலப்படாத ஒரு பேராற்றலின் விருப்பத்தினால் உலகில் இயக்கம் தோன்றியிருத்தல் வேண்டும்," என்று அறிஞர் கூறுவர். இப்பேராற் றலைத்தான் நாம் கடவுள் என்கிறோம். 3 இப்பேராற்றலின் முதல் இயக்கத்தினால் உலகத் தில் அனைத்தும் தோற்றம் எடுத்தன. இவ்வியக்கம் நிறுத்தப்பட முடியாது. இவ்வியக்கத்தின் வலிமை யால் சுடுகதிரும் தண்கதிரும் விண்மீன்களும் விளக் கம் தருகின்றன. இவ்வியக்கம் தொடர்ந்து செல்லும் ஆற்றலும் ஆக்கவன்மையும் உடையது. ஒவ்வொரு அணுவிலும் மின்மினிப் பூச்சி போல ஒளிவிடும் மின் அணுக்கள், இறைவன் விருப்பத்தால் முதலில் தோன் றிய அசைவின் பயனாய்த் தோன்றுவன என்பதை உணர்தல் வேண்டும். விஞ்ஞானிகள் இந்தப் பேராற்றலின் இயக் கத்தை முதலில் நன்கு உணராமல், "உலகத்திற்

  • Ether
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/8&oldid=1692968" இலிருந்து மீள்விக்கப்பட்டது