பக்கம்:அருவிகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 சிற்றூரே மக்கள் துணைப் பாடம் குடியிருப்பாக இருக்கின்றது.. மேற்குப் பக்கத்து ஆற்றுப்பகுதி ககனசுகி என்று வழங்கப்படுகிறது. கிழக்குப் பகுதிக்குப் பார்சுகி என்பது பெயர். காவிரியின் இவ்விரண்டு பிரிவுகளும் மூன்று கல் தொலைவு பாய்ந்து, அருவிகளாக உரு. மாறிக் கீழ்நோக்கி விழுகின்றன. இவ்வருவிகளின் தொகுப்புக்கே சிவசமுத்திர அருவி என்று பெயர் வழங்குகிறது. ககனசுகி காவிரியின் மேற்குப் பகுதியான ககனசுகி தன் போக்கில் இரண்டு கிளைகளாகப் பிரிந்து, எட்டிக்கூர் என்னும் தீவைப் படைத்து, ஏறத்தாழ முந்நூற்று எண்பதடி ஆழத்தில் உள்ள கற்பாறைகளின் மீது பேரிரைச்சலுடன் விழுகின்றது. இங்ஙனம் பாறை மீது விழுந்து தெறிப்பதால் உண்டாகும் நீர்ப்படலம் புகைப்படலம் போல வானவுலகிற் பரந்து நிற் கின்றது. இங்ஙனம் வானளாவித் தோன்றும் புகைப் படலத்தை நாம் நீண்ட தொலைவிலிருந்து பார்க்க லாம். ககனசுகி இரண்டாகப் பிரிந்து விழுவதால் இரண்டு அருவிகளின் காட்சியை நல்குகின்றது. சிவசமுத்திரத் தீவைக் கிழக்குப் பக்கமாகச் சுற்றி வரும் காவிரிப்பகுதியும் அருவியாகவே விழுகின்றது. இவ்வாறு காவிரியாறு மூன்றாகப் பிரிந்து, சிவசமுத் திரம் என்னுமிடத்தில் மூன்று அருவிகளாகக் கீழ் நோக்கி விழுகின்றது. 'ககனசுகி குறைந்த அகல முடையது; விரைந்து செல்லும் நீரோட்டத்தை உடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/80&oldid=1693041" இலிருந்து மீள்விக்கப்பட்டது