பக்கம்:அருவிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவசமுத்திர அருவி 79 பார்சுகி காவிரியின் கிழக்குப் பகுதியான பார்சுகி முன்னதைவிடச் சிறிது அகன்றது; அமைதியான நீரோட்டத்தை உடையது. இஃது அருவியாக விழு மிடத்தில் இதன் அகலம் ஏறத்தாழக் கால் கல் என்று சொல்லலாம். உருகிய வெள்ளி நீரின் தன்மையை அடைந்து கீழ்நோக்கி விழுவது போல, இவ்வருவி மலை முகட்டிலிருந்து கீழ் நோக்கி விழு கின்றது. கோடைக் காலத்தில் இது பல சிறிய அருவிகளாகப் பிரிந்து காணப்படுகின்றது. இவ் வருவி விழத்தொடங்கும் மலைப்பாறைமீது குதிரை லாடம் போன்ற ஆழமான பகுதி இருக்கின்றது. இதன் வழியாகப் பெரும்பகுதி நீர் ஒருங்கு சேர்ந்து கீழே பாய்ந்து மீண்டும் முப்பதடி இறங்கிப் பாறை யின் அடிப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கலக்கின் றது. பின்பு இது வடபுறமாகவே பல குறுகிய மலைக்குடைவுகளின் வழியாகப் பாய்கின்றது. இங் ஙனம் பாய்ந்து இறுதியில் மேற்குக் கிளையுடன் சேரு கின்றது. இவ்வாறு ஓர் உருவம் தாங்கிய காவிரி கிழக்கு நோக்கிப் பாயத் தொடங்குகிறது. அருவிக்கு அப்பால் இவ்வாறு ஒன்று சேர்ந்த காவிரி, சாம்பசி யாற்றைப் போலவே பற்பல குன்றுகளுக்கு இடையே வளைந்தும் நெளிந்தும் செல்லவேண்டும் துன்ப நிலை ஏற்படுகின்றது. குறிப்பிட்ட ஓர் இடத்தில் இவ் யாறு தன் உடலைக் குறுக்கிக்கொண்டு இரண்டு குன்றுகளுக்கு இடையேயுள்ள மிகக் குறுகிய வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/81&oldid=1693042" இலிருந்து மீள்விக்கப்பட்டது