பக்கம்:அருவிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 தொலைவிலுள்ள துணைப் பாடம் ஆரியன்காவுக் கணவாயிலிருந்து படிப்படியாக உயர்ந்துகொண்டே வந்து, குற்றாலத் துக்கு இரண்டுகல் தொலைவிலுள்ள ஐந்தருவி தோன் றும் இடம் முதல் ஐயாயிரம் அடி வளர்ந்து, குற்றாலத் தைக் கடந்து தெற்கேயுள்ள பொதிகை மலையை நோக்கிச் செல்லுகின்றது. இங்கு மிக்க உயர முள்ள சிகரம் 'பஞ்சம் தாங்கி' என்று பெயர் பெற்றுள்ளது. இதன் உயரம் ஐயாயிரத்து நூற்று முப்பத்தைந்து அடி. இக்கொடுமுடி, நாட்டின் பிறபகுதிகள் மிகக் கொடிய வற்கடத்தால் வாட்டமுறும் காலத்திலும், மலைப்பகுதியில் மழைக்குக்காரணமாக இருந்து வற் கடம் தோன்றாமல் மக்களைத் தாங்குவதால் 'பஞ்சம் தாங்கி' எனக் காரணப்பெயர் பெற்றது என் று மக்கள் கூறுகின்றனர். அருவியைத் தாங்கியுள்ள குற்றால மலை மூன்று கொடுமுடிகளை உடையது; ஆதலால் திரிகூடமலை என்றும் வழங்கப்படுகிறது. செல்வமும் நிறைந்துள்ள மலையாதலால் கூடமலை' என்றும் பெயர் பெறும். திரிகூடமலை அழகும் து ‘திரு. திரிகூடமலை சில இடங்களில் வானுற வோங் கியும், சில இடங்களில் படுத்தும், சில இடங்களில் பருத்தும், சில இடங்களில் மெலிந்தும் தொடர்ந்தும், ஒன்றன்பின் ஒன்றாய்ச் சேர்ந்தும், சில இடங்களில் பிரிந்தும் பலவகைத் தோற்றம் அளிக்கின்றது.. இம்மலையில் தேக்கு, கோங்கு, அத்தி, புன்னை, ஆல், இலுப்பை முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்துள் ளன. தென்னை, மா,பலா, வாழை, கமுகு, ஏலம், கிராம்பு, சாதிக்காய், சந்தனம் முதலிய மரங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/97&oldid=1693058" இலிருந்து மீள்விக்கப்பட்டது