பக்கம்:அரை மனிதன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

101


மனிதனும் அரை மனிதன்தான். கால் இல்லாத மனிதனும் அரை மனிதன்தான். உழைத்துச் சாப்பிட முடியாத என்னைக் காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு; அதற்காகத்தான் அவர்கள் என்னை விருந்தாளியாக வைத்திருக்கிறார்கள்."

"உனக்கு எப்படிடா மனம் வந்தது அதைத் திருட "யார் அவள்தானா அம்மாகண்ணு?" என்று போனவளை நிறுத்திக் கேட்டாள்.

"அந்தக் கழிசடைக்காகத்தான் இதைத் திருடினாயா?"

என்ன அழகான வார்த்தை. அவளுக்குச் சூட்டிய பட்டம் 'கழிசடை' எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

"அவள்தான் என்னை ஜாமீனில் விடப் போகிறாள்" என்றேன்.

“விடுவாள். உன்னை அவள் தன் கையின் கீழே போட்டுக் கொண்டு."

"ஊனமுற்றவருக்கு ஆதரவு தருகிறாள்; அதை எப்படிம்மா மறுக்க முடியும்?"

"அதைவிட நாக்கைப் பிடுங்கிச் செத்துப் போகலாம். ஒரு முழம் கயிறு.”

"அப்படி என்றால் நீங்களும் அப்பாவும் எப்பொழுதோ பிணமாகிக் கிடக்க வேண்டியதுதான்."

"அப்டீன்னா"

"அவள்தான் உங்களுக்கு மாதா மாதம் மணியார்டர் செய்தாள். அப்பாவுக்குக் கண்ணிலே காட்டிராக்ட் வந்ததே அப்பொழுது யார் மணியாடர் அனுப்பியது".

"தம்பி"

"அவன் பெயரில் வந்தது. அது அவள் அனுப்பியது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/103&oldid=1462000" இலிருந்து மீள்விக்கப்பட்டது