பக்கம்:அரை மனிதன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ரா.சீனிவாசன்

103



"அப்பாவுக்கு வேலை இல்லை; கண்ணில் ஒளி இல்லை. அவள் உங்களுக்கு வாழ்வில் ஒளி தந்தாளா? அவளால் யாருக்கு நன்மை? அவர்கள் வண்டிச் சக்கரம் என் காலைப் பிரித்து நீக்கிவிட்டது. என்னை உழைக்க முடியாமல் செய்து விட்டது. அவர்கள் பணத்தால் அதைச் சரிப்படுத்த முடிந்தது. அதைக் கொண்டு அவனைப் படிக்க வைத்தோம். அவ னையும் அவள் அழைத்துக் கொண்டு போய் விட்டாள். அவளை இந்தக் 'கழிசடை' நீர்தான் காப்பாற்றினாள். அது தான் பயிர்க்கு உரம் சேர்க்கிறது. செடி கொடிகள் வளர உதவுகின்றது. அவள் அசல் கழிசடை நீர்தான். அதனால்தான் அவள் உங்களைக் காப்பாற்ற முடிந்தது.

அப்பொழுது அந்த உண்மையைச் சொல்லி இருந்தால் நீங்கள் அந்தப் பணத்தை வாங்கி இருக்கமாட்டீர்கள். உங்களுக்கு யார் ஒரு காசு தந்திருப்பார்கள். உங்களுக்கு எந்தத் தவறும் செய்யத் தெரியாது. மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து விட்டீர்கள். ஒருவர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டீர்கள். மிஞ்சுவது என்ன. நீங்கள் எங்காவது வீட்டு வேலை செய்து பிழைத்திருக்க வேண்டும். உங்கள் உடலை வளைத்து வருத்தி எப்படியாவது காலம் கடத்தி இருப்பீர்கள். அந்தக் கிழவர் இந்த நாட்டுக்கு ஒளி வழங்கும் எழுத்துகளைக் கூட்டும் அவர் வாழ்வு என்ன ஆகி இருக்கும்? அதனால் யாரையும் அவர்கள் தவறுகளைக் கொண்டே நல்லவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லக் கூடாது. அவர்களால் இந்த உலகத்துக்கு நன்மையா தீமையா என்றுதான் பார்க்க வேண்டும். தவறுகளைத் திருத்திவிடலாம். ஆனால் சுரண்டலைத் தடுக்க முடியாது. அவர்கள் நல்ல குணம் அவர்களுக்குத்தான் நன்மை" என்று அம்மாவிடம் என் உள்ளக் குமுறலை எல்லாம் கொட்டி அவள் மனத்தை மாற்றினேன்.

"அப்படி என்றால் உனக்கும் அவளுக்கும்."

"தொடர்பு இல்லை; உறவு இருந்தது. அது அவள் தங்கை; நான் அண்ணன் என்பது; ஆனால் தவறான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/105&oldid=1462002" இலிருந்து மீள்விக்கப்பட்டது