பக்கம்:அரை மனிதன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

107


மற்றவர்கள் கீழே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் மேலே போவதைத் தடுக்கவில்லை. நீங்கள் தாழ்ந்துவிட்டபோது அவன் வந்து உங்களைத் தாங்க வில்லை. இப்பொழுது நீங்கள் உயர்வதற்காக நான் தாழ்ந்து போக அவசியம் ஏற்படுகிறது. ஒரு சிலர் தியாகத்தால்தான் இந்த உலகமே உயர்கிறது."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீ தப்பு செய்ய வில்லை. அதனால் நீ சிறைக்குப் போகக் கூடாது.”

"அப்படீன்னா தப்பு செய்கிறவர்கள் தான் சிறைக்குப் போகிறார்கள் என்கிறாயா?”

"ஒன்று இரண்டு தவறுகள் ஏற்படலாம். அதனால் உள்ளே போகிறவர்கள் தவறு செய்யவில்லை என்று எப்படிக் கூறமுடியும்."

"இப்படி உள்ளே போகிறார்கள்; வெளியே வருகிறார்கள்; ஏன்?"

"குற்றவாளிகள்"

"அது அவர்களுக்குத் தண்டனை அல்ல. அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளே அடைக்கப்படு கிறார்கள்.”

“சமூக விரோதிகள்"

"அப்படியானால் தம்பியும் ஒரு சமூக விரோதிதான். அவன் தன் உழைப்பை நம்பி வாழவில்லை. யாரோ அவன் மாமனார் சொத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த வகையில் அந்தக் குடும்பத்தில் அவன் ஒரு அட்டை தானே? அவர்கள் உழைப்பை இவன் உறிஞ்சுகிறான் என்பதுதானே பொருள்?”

"அவர்களுக்கு இருக்கிறது. அவன் சாப்பிடுகிறான்.”

"அது கூடாதம்மா! அது அவர்களே வைத்துக் கொள்ளட்டும். தன் உழைப்பால் அவன் முன்னுக்கு வரவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/109&oldid=1462006" இலிருந்து மீள்விக்கப்பட்டது