பக்கம்:அரை மனிதன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



108

அரை மனிதன்


அவர்கள் அவன் கேளிக்கைகளுக்குத் தருவார்கள். சுகபோக வாழ்வுக்கு உதவுவார்கள். ஆனால் தர்மத்துக்கும் நியாயத்துக்கும் உதவமாட்டார்கள். வேண்டுமென்றால் ஒன்று செய். தம்பிதான் கொடுத்தான் என்று ஒர் உண்மையைச் சொல்லச் சொல். நானும் தப்பித்துக் கொள்கிறேன். ரங்கனும் தப்பித்துக் கொள்வான்.”

"உண்மையாக இருந்தால்தானே அப்படிச் சொல்ல முடியும்?"

“எது நன்மையைத் தருமோ, அதுதான் உண்மை; இதனால் எனக்கு நன்மை விளைகிறது."

"அவள் சும்மா இருக்கமாட்டாளே”

"உண்மை சொல்லுவதுக்கு ஏன் அஞ்சவேண்டும்?"

"அது அவனுக்கு நன்மை தராதே. உன் சொற்படிப் பார்த்தால் எது நன்மையைத் தருமோ அதுதானே உண்மை. அது அவனுக்கு நன்மையைத் தராதபோது அது பொய் தானே?"

"பின் அந்த முயற்சியை விட்டு விடு, அவனிடம் சொல்லிப்பார்".

"நான் எப்படிப் போவேன்?"

"அம்மா! பாரதக் கதையைப் படித்திருக்கிறாயா?”

"அண்ணன் தம்பி சண்டை தானே?"

"நீங்கள் அப்படி ஒன்றும் சண்டை போட்டுக் கொள்ள வில்லையே".

"அவன் நாடாள்கிறான்; நான் காடாளப் போகிறேன். எனக்கு நாட்டில் உலவ வரம் கேட்கிறேன். அவன் மறுத்தால்"

"பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/110&oldid=1462007" இலிருந்து மீள்விக்கப்பட்டது