பக்கம்:அரை மனிதன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

115



அதற்குள் அவனே உள்ளே வந்தான்.

“உனக்கு இந்தப் பெண் தெரியுமா?”

“பாதி தெரியும். அதாவது அவள் உன்னோடு சுற்றிக் கொண்டிருப்பாள் அந்தப் பாதி தெரியும். ரயிலடியில் அவளையும் உன்னையும் பார்த்திருக்கிறேன்.”

நான் எப்படி அவனைப் பற்றி அவ்வாறு கூறமுடியும்?

நான் அவளோடு பகிரங்கமாகச் சுற்றுகிறேன். அவன் அவளைக் கள்ளக் கடத்தல் செய்யும் பொழுது எப்படி என்னால் காண முடியும். அதைக் கண்டாலும் எப்படிச் சொல்ல முடியும்.

“அவள் வந்து சொன்னாள். உன்னை ஜாமீனில் மீட்டுத் தரும்படி”

“ஆக உன் மனைவி உன்னிடம் சொல்லவில்லை. அதை விட முக்கியமான மற்றொருத்தி உன்னிடம் சொல்லி இருக்கிறாள்”

“அவள் சொன்னாள் என்பதற்காக அல்ல. நீ அகப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்பதற்காகத்தான் வந்தேன்”

“என்னை வெளியே விடுவதால் உனக்கு என்ன லாபம்?”

“அது என் கடமை”

“கடமை என்ற சொல்லை நினைவுப்படுத்தியதே இந்த அம்மாகண்ணுதான். உன் மனைவி உன் கடமையை உணர்த்தவில்லை.”

“அவளைப் பற்றி ஏன் இழுக்கிறாய்”

“அவள்தான் என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறாள்”

“நீ ஏன் நெக்லசோடு வந்தாய்?”

“அதை உன்னிடம் சேர்ப்பிப்பதற்காகத்தான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/117&oldid=1462013" இலிருந்து மீள்விக்கப்பட்டது