பக்கம்:அரை மனிதன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

அரை மனிதன்



"தபால்காரன் கொண்டு வரும் கடிதங்களில் அவன் பெயர் முகவரியில் இடம் பெறவேண்டும். எடுத்த பேச்சுக்கு எல்லாம் எங்கள் வீட்டுக்காரர் என்று அவள் பெருமையாகப் பேச வேண்டும்."

"அவன் வேலைக்குப் போகும் போது அவள் வெளியே வந்து நின்று வழி அனுப்ப வேண்டும். வரும் போது வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க வேண்டும். மாலை வேளை காற்று வாங்க இருவரும் உரிமையாக வெளியே போக வேண்டும். அவனுக்காக அவன் முன்னால் தியோட்டர்களில் ரிசர்வ் செய்து வைக்க வேண்டும்; மொத்தமாகச் சொன்னால் அவன் ஒரு முழு நேர வேலைக்காரனாக இருக்கவேண்டும். அது இவனால் முடியுமா. ஏற்கனவே இவன் ஒருத்தி காலால் இடும் வேலையைத் தலையால் செய்யும் தாசானு தாசனாக ஆகிவிட்ட பிறகு இவன் எப்படி மற்றொருத்திக்கு அடிமையாக முடியும். துணிந்து அவள் என் மனைவி என்று சொல்லா விட்டாலும் 'துணைவி' என்று சொல்லவாவது முடியுமா?"

"இதெல்லாம் போகட்டும். ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்; தொண்ணுறு நாளுக்குப் பிறகு இவன் அவளோடு கொள்ளும் உறவு என்ன? அவள் பழைய வரலாற்றின் பெருமையை எண்ணி ஒரு காவியம் புனைவது தானே. இவனுக்கு அது எல்லாம் எப்படி முடியும்."

"அவள் உதிரியினத்தைச் சார்ந்தவள். அங்கே இருந்த ஒருவனைத் தேடிக்கொண்டாள். அவன் அவளுக்காகக் கீழ்ப் படிவான். அவனுக்காக வாழ்வது போன்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்படும்; இவனோடு வாழ்ந்தால் அவள் காசுக்காக வாழ்கிறாள் என்றுதான் நினைப்பான். நிச்சயமாக இவன் அவள் விரும்பும் ஆம்படையான் ஆகமுடியாது. இந்த நிலையில் இவன் மறுபடியும் சின்ன ஆசையிலிருந்து விடுபடவில்லை. அவள் மறுபடியும் அந்த உதிரியினத்தில் இருப்பாள். எப்பொழுதாவது தனக்குப் பயன்படுவாள் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/122&oldid=1462020" இலிருந்து மீள்விக்கப்பட்டது