பக்கம்:அரை மனிதன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அரை மனிதன்


 என்பது எனக்கு அவமானம்தான். அதனால் உன் ஜாமீன் எனக்குத் தேவையில்லை. இல்லை; முதல் உண்மையே சொல்லிவிடு. நீ அம்மாகண்ணுக்குத்தான் கொடுத்ததாகச் சொல்லிவிடு. இல்லை அந்தத் துணிவு உனக்கு இல்லை என்றால் அம்மாகண்ணுவை விட்டே சொல்ல வைக்கிறேன். முதலிலே பாசம் உறவு என்ற அடிப்படையில் நான் சொல்வது. மற்றது உண்மை நீதி என்ற அடிப்படையில் நான் பேசுவது. இரண்டுக்கும் உனக்கும் சம்மதம் இல்லை என்றால் நான் குற்றவாளிதான். அந்த முடிவிலிருந்து நான் மாற முடியாது" என்று முடித்தேன்.

அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை. அந்தத் துணிவு அவனுக்கு ஏற்படவில்லை. துணிந்து அவன் தன் மனைவியிடம் பகைமை தேடிக்கொள்ள முடியாமல் போய் விட்டது. நான் உண்மையைச் சொல்லமாட்டேன். அதனால் அவனுக்கு இழிவை உண்டாக்கமாட்டேன் என்பதில் அவன் நம்பிக்கை வைத்தான்.

இனி அம்மாகண்ணு அவனுக்குக் கிடைக்கமாட்டாள். நான் சொன்ன ஒரு ஆம்படையானாக அவன் ஆக முடியாது. அதனால் அவன் மறுபடியும் மனம் மாறிவிட்டான். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிட்டது என்று சொல்லுவார்களே அதுபோல் ஆகிவிட்டான். ஒரு குற்றவாளியைத் தன் அண்ணன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டான். அங்கு இருப்பதே அவமானம் என்று அந்த இடத்தைவிட்டு அவன் வெளியேறி விட்டான்.

குந்திதேவி கண்ணணிடம் போகவில்லை. நேரே கண்ண பெருமானிடம் சென்றாள். எப்படியாவது தன் மகனைச் சிறைக்குப் போகாது காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாள். அந்தக் கண்ணபெருமான் வேறுயாருமில்லை. அவன் என் தங்கையின் கணவன். அவன் பெயரும் கண்ண பெருமான், பி.ஏ.பி.எல். அவன் சட்டம் படித்த வக்கீலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/124&oldid=1462022" இலிருந்து மீள்விக்கப்பட்டது