பக்கம்:அரை மனிதன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

அரை மனிதன்


 என்றைக்காவது கழுத்தில் போட்டிருக்க வேண்டும். அதை அவள் போட்டதே இல்லை. அவள் இந்த வழக்கைப் பதிவு செய்தது தவறு. எனவே என் மகனை விடுதலை பண்ண வேண்டும்" என்று எழுதிக் கொடுத்தாள்.

எது நன்மையோ அதுதான் உண்மை. ஏன்? நான் சொல்லிக் கொடுத்த பாடம் அம்மாவுக்கு நன்றாக ஏறி இருந்தது. கண்ணனின் கூரிய மூளை இதற்குப் பயன்பட்டது. பாரதப் போரில் கண்ணபெருமான் போரை மூட்டிவிட்டான். இந்த வழக்கில் போரைத் தவிர்த்தான் இந்தக் கண்ணபெருமான். எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

போலீச் சப்-இன்ஸ்பெக்டர் அந்தக் கடித்தை என் தம்பி மனைவி அவளுக்கு போன் செய்தார். அதைப் படித்துக் காட்டினார். அதை ஒப்புக் கொள்ள முடியாது என்று அவள் சொல்லி விட்டாள். ஆகத் தன் மகனைக் காப்பாற்றுவதற்காக அவ்வாறு கூறப்படுகிறது என்றாள். நேரில் வரும்படி அவர் போனில் பேசினார்.

சில நேரத்துக்கு எல்லாம் தம்பியும் அவளும் வந்து இறங்கினார்கள். அவன் ஒன்றும் பேசவில்லை. அவனிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அவளையே பேசவிட்டான். அவன் பெண்ணுக்கு உரிமை கொடுத்தான்.

அவள் சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் நாற்காலியில் உட்கார்ந்தாள்.

"இது அவர்களால் எப்பொழுதோ எனக்குக் கொடுக்கப்பட்டது. இதில் அவர்களுக்கு உரிமை இல்லை. எங்கள் வீட்டில்தான் இருந்தது. என் கணவர் இதை லாக்கரில் வைத்திருந்தார். சில நாளுக்கு முன்னால்தான் அதை வெளியே எடுத்தார். அவர் தன் அலமாரியில் வைத்திருந்தார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/126&oldid=1462024" இலிருந்து மீள்விக்கப்பட்டது