பக்கம்:அரை மனிதன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அரை மனிதன்


 "ஏன்'மா இந்த நகையை நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் கொள்கை வெற்றி பெறும். நொண்டி இங்கே வெளியே உலவுவது அவமானம். அவன் இரயிலடிக்குப் போய்விடுவான். நீங்கள் அங்கே யாரையாவது வண்டி ஏற்றப் போக வேண்டியிருக்கும். அங்கே என்னைப் பார்க்கும்பொழுது உங்கள் சிநேகிதர்கள் யாராவது ஏதாவது கேட்பார்கள். அது உங்களுக்கு அவமானம்; தம்பிக்குக் கோபம் வரும். என்னை உடனே சுலபமாக அறைந்து விடுவார்கள். நீங்கள் எங்காவது திருடலாமே என்று சொல்ல வேண்டிவரும்" என்றேன்.

அந்த நகையை சப்-இன்ஸ்பெக்டர் எடுத்து வெளியே வைத்தார். அந்த நகைக்குச் சொந்தக்காரர் அதைக் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார். அம்மா அவசரப் படவில்லை.

மறுபடியும் அந்தப் பாரதக் கதைதான் நினைவுக்கு வருகிறது

குந்திதேவி கண்ணனை ஆற்றில் விட்டபோது ஒரு பேழையுள் அவனை விட்டாளாம். அதோடு ஒரு சேலையையும் வைத்து அனுப்பினாளாம். அது அவள் சொந்தச் சேலையாம்.

பின்னால் அவன் அங்க தேசத்துக்கு அதிபதியான பிறகு அவன் தாய் என்று பல பேர் சொல்லிக் கொண்டு வந்தார்களாம். அதை உடுத்தியவர்கள் எல்லாம் சாம்பலாய்ப் போய் விட்டார்கள். குந்திதேவிதான் வந்து அந்தச் சேலையை உடுத்திக் கொண்டாளாம்.

என் தம்பி மனைவி அதை எடுக்க மறுத்து விட்டாள்; அவள் தன் வைராக்கியத்தை விட்டுக் கொடுக்க விரும்ப-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/128&oldid=1462027" இலிருந்து மீள்விக்கப்பட்டது