பக்கம்:அரை மனிதன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அரை மனிதன்


 உயர்ந்து விட்டான். தங்கை உயர்த்தப்பட்டாள்; நான் மறு படியும் பழைய இடத்துக்கு வந்து விட்டேன். இப்பொழுது அது தானும் உயர எழுவதில்லை; யாருக்கும் பயன்படுவது இல்லை; கெட்டுவிட்டது.

கால் இழந்ததுகூட அவ்வளவு கஷ்டமாகத் தெரிய வில்லை. அந்த அச்சு எந்திரம் போனதுதான், ரொம்பவும் வருத்தத்தைத் தந்துவிட்டது. அப்புறம் குடும்பம் நடத்துவதே கஷ்டமாகிவிட்டது. குடும்பம் எங்கே இருக்கிறது. ஒருத்திக் கட்டிக் கொடுத்தோம். மற்றொருவன் கட்டிக்கொண்டு போய்விட்டான். இரண்டு கிளிகள் பறந்து சென்றுவிட்டன. நான் எப்படிப் பறக்க முடியும். சிறகு ஒடிந்த பறவை எப்படிப் பறக்க முடியும்?

அந்தக் கிழவர் இப்பொழுது தன் எழுத்தை எண்ணிக் கொண்டு காலம் கடத்தினார். அம்மா மட்டும் அவ்வப்பொழுது பெண்ணைப் பார்த்துவிட்டு வருவாள். பெண் பெற்றதன் காரணம் இப்பொழுதுதான் விளங்குகிறது. அவள் நிம்மதியாக இருக்கிறாள். என்னைப்பற்றியும் மறந்து விட்டார்கள். நானும் அவர்களை மறந்து விட்டேன். என்னை எதிர்பார்ப்பவர்கள் யாரும் இல்லை. நானும் எதையும் எதிர் பார்க்கவில்லை.

2

நான் இப்பொழுது பரந்த உலகத்துக்கு வந்து நின்று விட்டேன். என் உடலும் உள்ளமும் உரம் பெற்று விளங்குவன. எதைக் கண்டும் கலங்காத நிலைமை என்னுள் அமைந்துவிட்டது. இப்பொழுது இந்த உலகத்தில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை; செய்வதைப் பார்க்கும் பொழுதுபோக்கு என்னிடம் அமைந்து விட்டது.

எனக்குத் திருமணம் ஆகி இருந்தால் தம்பிக்குமுன் ஆகி இருக்கவேண்டும். அந்தத் துணிவு எனக்கு ஏற்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/14&oldid=1461920" இலிருந்து மீள்விக்கப்பட்டது